யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவு விழா யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் கடந்த 29.08.2015 சனிக்கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் 6 மணி வரை இடம்பெற்றது.
தமிழ்ச்சங்கத் தலைவரும் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சு.கபிலன் தமிழ்த்தெய்வ வணக்கம் இசைத்தார்;. யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா வரவேற்புரையாற்றினார். மாங்குளம் அமதி கரங்கள் நிறுவனத்தின் இயக்குநர் அருட்பணி செ.அன்புராசா அடிகள் தொடக்கவுரையாறற்றினார். தமிழ்ச் சங்கப் பொருளாளர் ச.லலீசன் ஆய்வுரைக்கான திறப்புரையை ஆற்றினார்.
சங்க இலக்கியமும் தனிநாயக அடிகளாரும் என்ற பொருளில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீ..பிரசாந்தன் நினைவுச் சொற்பொழிவாற்றினார்.
தொடர்ந்து கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசனை நடுவராகக் கொண்டு ‘தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் கனவு நனவாகிவிட்டதா? நனவாகிவிடவில்லையா? என்ற தலைப்பில் பட்டிமண்டபம் இடம்பெற்றது. நனவாகிவிட்டது என்ற அணியில் யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா, யாழ். பல்கலைக்கழக மாணவி சி.அனோஜிதா, சமூகசேவை உத்தியோகத்தர் வே.சிவராஜா ஆகியோர் வாதாடினர். நனவாகிவிடவில்லை என்ற அணியில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலஷண்முகன், கல்வியியற் கல்லூரி முகிழ்நிலை ஆசிரியை த.நாராயணி, யாழ். பல்கலைக்கழக மாணவன் ஸ்ரீan.சிவஸ்கந்தஸ்ஸ்ரீ ஆகியோர் வாதிட்டனர். நீண்ட வாதப்பிரதிவாதங்களின் பின்னர் நனவாகிவிடவில்லை என நடுவர் தீர்ப்பு வழங்கினார்.
நினைவுப்பேருரையாற்றிய கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன், புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் வண.ஜெறோ செல்வநாயகத்தால் பொன்னாடை போர்த்தப்பட்டும் தனிநாயகம் அடிகளாரின் உறவினர் புலவர் அ.பெ.அரியநாயகத்தால் மாலை அணிவிக்கப்பட்டும், பேராசிரியர் தி.வேல்நம்பியால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டார்.
வடமாகாண தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் கௌரி முகுந்தன் நன்றியுரையாற்றினார் உயர்தொழினுட்பக் கல்லூரி மாணவன் ஜீவா.சஜீவன் நிகழ்வுகளை தொகுத்தளித்தார்
நிகழ்விற்கு அவுஸ்திரேலிய சட்டத்தரணி மகாலிங்கம் சுதர்சன் அனுசரணை வழங்கினார். நிகழ்வில் தமிழ்ச்சங்த்தின் ஆயுட்கால உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சி.சிறிதரன், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் தியாகராஜா நிரோஷ், தனிநாயகம் அடிகளாரின் உறவினர்கள், அருட்தந்தையர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.