யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்ப்பாண முகாமையாளர் சம்மேளனமும் இணைந்து நடத்திய திருக்குறளில் அறிவியல் கருத்துக்கள் என்ற பொருளில் அமைந்த கருத்தரங்கு 14.05.2014 புதன்கிழமை நல்லூர் யூரோவில் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் டிஎப்சிசி வர்த்தக வங்கியின் யாழ் பிராந்திய முகாமையாளர் எஸ்.ரவீந்திரா வரவேற்புரையையும் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் வாழ்த்துரையையும் வழங்கினர். தொடர்ந்து முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசனின் நெறிப்படுத்தலில் கருத்தரங்கு இடம்பெற்றது. திருக்குறளில் பொறியியல் என்ற பொருளில் எந்திரி மு.தில்லைநாதனும் திருக்குறளில் பொருளியில் என்ற பொருளில் தமிழ்ச்சங்க உபதலைவரும் கல்வியியற் பேராசிரியருமாகிய மா.சின்னத்தம்பியும் திருக்குறளில் மருத்துவம் என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடப் பேராசிரியர் கா.சிவபாலனும் திருக்குறளில் சட்டம் என்ற பொருளில் ஓய்வு பெற்ற நீதிபதி மு.திருநாவுக்கரசுவும் திருக்குறளில் முகாமைத்துவம் என்ற பொருளில் யாழ்.தமிழ்ச்சங்க தலைவரும் யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவக் கற்கைகள் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பியும் கருத்துரைகளை வழங்கினர். யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரை இணைப்பாளர் பா.பாலகணேசன் நிறைவுரையையும் முகாமையாளர் சம்மேளன இணைப்பாளர் வி.நிரஞ்சன் நன்றியுரையையும் நல்கினர்.
தளத்தின் அகத்தே
-
பதிவுகள்
- தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 2024
- சிறப்புற நடைபெற்ற தமிழ்ச் சங்கத்தின் ஆடிப்பிறப்பு விழா
- தமிழ்ச்சங்கத்தின் ஆடிப்பிறப்பு விழாவும் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் நவாலியில்
- யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு பதவி ஏற்றது
- தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் நிகழ்வுகள்
- அமரர்.திருமதி.மேனகா தனபாலசிங்கம் அவர்களுக்கு தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகள்
- காரை கவிஞர் வடிவழகையனின் கவிதை நூல்களின் வெளியீட்டு விழா
- பாரதியார் பிறந்தநாளில் தமிழ்ச் சங்க வழிபாடு
- சிறப்புற்ற தமிழ்ச் சங்கத்தின் நாவலர் நினைவரங்கம் -2021
- சைவத் தமிழின் செழுமையைப் பேண உழைத்த பெருந்தகை சைவப்புலவர் சு.செல்லத்துரை
மேனாள் தலைவரின் அகத்தின் கண்…
கருத்துமையம்