மதுரைப் பண்டிதர் சச்சிதானந்தன்

Pandit sachithananthanமிகச் சிறந்த கவிஞன் தமிழறிஞர் ஆங்கிலத்திலும் தமிழிலும் வடமொழியிலும் வல்லவர் உளநூல் கல்வி நூல் விற்பன்னர் பண்டிதர் பீ.எ. எம்.பில் முதலான பல பட்டங்களைப் பெற்றவர் பலாலி ஆசிரியர் கலாசாலையில் உபஅதிபராயிருந்து ஓய்வு பெற்றவர் சுவாமி விபுலானந்தர் யாழ்நூல் உருவாக்கிய காலத்தில் அவருடன் இருந்து ஆய்வுகளுக்கும் எழுத்துப்பணிக்கும் உதவிய பெருமைக்குரியவர் கீழைத்தேய மேலைத்தேய இருவழிக்கல்வியிலும் ஈடுபாடும் புலமையும் மிக்கவர்.

கவிதை சிறுகதை நவீனம் காவியம் முதலாம் பல்துறை இலக்கியத்துறை படைத்த இவரின் நவ கவிதைகளின் தொகுப்பாக ஆனச்தத்தேன் என்ற நூல் 1954 இல் வெளிவந்தது.

“சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்”

என்ற பாடல் வரிகள் பிரபல்யமானவை

ஈழத்தமிழர்களின் பெருந்தலைவர்களில் ஒருவரான மாவை கொல்லங்கலட்டியை பிறப்பிடமாக கொண்ட கோப்பாய்க்கோமன் கு.வன்னியசிங்கம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை “தியாக மாலை” எனும் நூலாக எழுதி 1960ல் வெளிவந்தது “மாவை முருகன்” எனும் நூல் 1952இல் வெளிவந்தது.
1998ல் இவர் ”யாழ்ப்பாணகாவியம்” என்ற ஒரு நூலை வெளியிட்டுள்ளார் யாழ்ப்பான அரசின் 1450-1467 காலப்பகுதியில் யாழ்ப்பாண அரசனாக இருந்த கனக சூரியசிங்கையாரியனை கோட்டை அரசன் ஆறாம் பராக்கிரமபாகு ஆட்சியின் போது அவனுடைய வாரிசான சம்புமால் குமனரையன் வென்று யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி. ஆண்டதான வரலாற்றுச் செய்தியும், தமிழ் நாட்டிலிருந்து வந்த படை விஜயபாகுவை வென்று ஆட்சியைக் கைப்பற்றிய செய்தியும் இதன் கதையம்சமாக அமைந்துள்ளது. இரண்டாயிரம் பாடல்களுக்கு மேற்பட்ட இந்நூலில் பாயிரம் வழங்கிய பண்டிதர் க. கிருஸ்ணப்பிள்ளை அவர்கள்

“வரத்தினால் கவிசொல் மாண்பால் வரகவிஎன்னத்தக்கான்
கருத்தொடு காலங்கண்டு பலன் சொல்லுங் கணிமேதாவி
விருத்தத்தால் யாழ்ப்பாணக்காவயப்பொன்னைவிளைத்தான்வீரன்
தருக்கமும் வல்லான் சச்சிதானந்தன் சகத்தோர் போற்ற”

எனக் கூறுவது இவரது ஆற்றலைக் காட்டுவதாகும்.

இவ்வறிஞரின் நூல்கள் பல அச்சுப்பெறாமல் கையெழுத்துப் பிரதியாகவே உள்ளன. அவற்றிற் சில அடுத்து வெளிவரவுள்ளன.

பருவப்பாலியர் படும்பாடு நாலாயிரத்து முந்நூறு கவிதைகளிலான மகாகாவியம், 1950 முதல் 42 வருட கால இலங்கை வரலாற்றுக் காவியம், செல்வன் என்னும் தமிழ்ச் சிறுவனும் அவன் பள்ளி மாணவரும் பத்துவருட காலத்தில் என்ன பாடுபடுகின்றார்கள் என்பதைக் கருவாகக் கொண்டது. நெஞ்சை உருக்கும் ஒரு கண்ணீர் காவியம், இலங்கைக் காடுகள், யாழ்ப்பாணக் கிராமங்கள், கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, கிளாலித் துறைமுகம் என்பவற்றை நிலைக்களமாக கொண்டது.

மஞ்சுகாசினியம்” “இயங்கு தமிழியல்” மொழியியல் தொல்காப்பிய அடிப்படையில்  தமிழுக்கோர் பிரயோக இலக்கணம் இன்றைய வழக்கையும் இலக்கண வரம்புக்குள் அடக்குவது.

மரபு இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் ஆற்றல் மிக்க இவர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பேரறிஞர்களுள் ஒருவர். தெல்லிப்பழைக் கலை இலக்கியக்களம் இவரது ஆக்கங்கள் பற்றி மாவை பண்டிதர் க.சச்சிதானந்தன் இலக்கியப்பணி கைந்நூல் ஒன்றை வெளியிட்டது

ஈழகேசரி மறுமலச்சிக்காக இப்பிரதேச புனைகதை ஆசிரியர் எனப்போற்றப்படும் கவிஞன் சச்சிதானந்தன் அவர்களின் அன்னபுரனி எனும் தொடர் நவீனம் ஈழகேசரியில் (1942.07.12-1942.12.20) தொடர்ந்து வெளிவந்து பல புனைகதை ஆசிரியர்கள் உருவாக முன்னோடியாயிருந்தது.

Bookmark the permalink.

Leave a Reply