சிறப்புற்ற ஆடிப்பிறப்பு விழா -2019

 யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய ஆடிப்பிறப்பு விழாவும் சோமசுந்தரப்புலவர் நினைவரங்கமும் 16.07.2019 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு நவாலி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. தமிழ்ச் சங்க உறுப்பினர்  ஐீவா.சஐீவன் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் புலவரின் சிலைக்கு தமிழ்ச் சங்க பெருந்தலைவர் தகைசார் பேராசி்ரியர் அ.சண்முகதாசும் பாடசாலை நிறுவுனரின் சிலைக்கு பாடசாலை அதிபர் திரு.கிருஸ்ணாணந்தாவும் மாலை அணிவித்தனர். தொடர்ந்து இறைவணக்கம் தமிழ்த் தெய்வ வணக்கத்தை நவாலி மகாவித்தியாலய மாணவிகள் நிகழ்த்தினர். வரவேற்புரையை நவாலி வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் திருமதி.பா.சந்திரவதனி நிகழ்த்தினார். ஆசியுரையை பெருந்தலைவர் தகைசார் பேராசிரியர் அ.சண்முகதாசும் வாழ்த்துரையை நவாலி மகாவித்தியாலய அதிபர் திரு.கி.கிருஸ்ணானந்தாவும் ஆடிப்பிறப்பு குறித்த சிறப்புரையை தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசனும் நிகழ்த்தினர். தொடர்ந்து சோமசுந்தரப் புலவர் குறித்த நினைவுரையை தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் நிகழ்த்தினார். அவரது உரையைத் தொடர்ந்து நிகழ்வில் இடம்பெற்ற உரைகளில் உரையாளர்கள் தெரிவித்த கருத்துக்களில் மாணவர்களிடம் வினாக்கள் வினவப்பட்டு சரியான பதிலை அளித்த மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. தொடர்ந்து நிகழ்வின் சிறப்பு அம்சமாக தமிழ்ச் சங்க கலைஞர்கள் அருணா கேதீசின் இசையில் வழங்கிய சோமசுந்தரப்புலவர் உள்ளிட்ட ஈழத்துப் புலவர்களின் பாடல்கள் அடங்கிய இசைநிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் கீபோட் வாத்தியத்தை திரு.அருணா கேதீசும் ஒற்றோபாட் வாத்தியத்தை திரு.எம்.வி.கே.குமணணும் தபேளா வாத்தியத்தை திரு.எஸ்.பிரபாவும் இசைத்தனர். பாடல்களை பிரம்மஸ்ரீ குமாரதாசக் குருக்கள், பாடகர் மகா.தயாபரன் , இசைஇளவல் விஸ்வ சுந்தர் ஆகியோர் இசைத்து நிகழ்வை மெருகூட்டினர். நிகழ்வில் நன்றியுரையை தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.வேல்.நந்தகுமார் வழங்கினார். நிகழ்வின் நிறைவில் பாடசாரை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

Bookmark the permalink.

Leave a Reply