சிரேஸ்ட பேராசிரியர்கள் வேல்நம்பி விசாகரூபன் மற்றும் இரகுநாதனுக்கு வாழ்த்துக்கள்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் தி.வேல்நம்பி யாழ்.பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றார்.   05.03.2019 தனக்கு வழங்கப்பட்ட ( 2017 ஆம் ஆண்டு தொடக்கம் செயற்படும்படியான) சிரேஷ்ட பேராசிரியர் என்ற தகைமையை அவர் ஏற்றுக்கொண்டார்.

புத்தூர் மண்ணில் பிறந்து ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியில் கல்வி பயின்று வணிக முகாமைத்துவத் துறையிலும் தமிழ்த்துறையிலும் உயரிய ஆளுமை பெற்று விளங்கும் எங்கள் சிரேஸ்ட பேராசிரியர் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.

அதேளை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் உபதலைவர்களும் ஆயுள் உறுப்பினர்களுமான  பேராசிரியர் கி.விசாகரூபன் மற்றும் பேராசிரியர் ம.இரகுநாதன் ஆகியோரும் சிரேஸ்ட பேராசிரியர் தகமையைப் பெற்றுள்ளனர். பேராசிரியர் விசாகரூபன் நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் என்பதுடன் நாட்டார் வழக்கியல் சார்ந்த தமிழர் மரபுகள் குறித்த ஆழமான புலமைமிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பேராசிரியராக நியமனம் பெற்ற ஒருவர் தனது எட்டு வருட சேவைக்காலத்தை நிறைவு செய்து தேவையான தகைமைகளை பூர்த்தி செய்யும் போது சிரேஷ்ட பேராசிரியராகத் தரம் உயர்த்தப்படலாம்.

பேராசிரியர் என்ற தகைமை பல்கலைக்கழகச் சேவைக் காலத்திலேயே பயன்படுத்துக் கூடியது ஆகும். ( 65 வயதுவரை) ஆயினும் பல்கலைக்கழக சேவையில் 10 வருடங்கள் பேராசிரியராக விளங்கியவர் வாழ்நாள் பேராசிரியர் என்ற தகைமையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சிரேஸ்ட பேராசிரியர்களாகப் பதவியுயர்வு பெற்ற தமிழ்ச் சங்கத்தின் முள்ளாள் தலைவரும் பொருளாளருமான பேராசிரியர் தி.வேல்நம்பி தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் உபதலைவர்கள் பேராசிரியர் கி.விசாகரூபன் மற்றும் பேராசிரியர் ம.இரகுநாதன் ஆகியோருக்கு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெருமை கலந்த வாழ்த்துக்கள் 

Bookmark the permalink.

Leave a Reply