யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் வடமாகாணக் கல்வித் திணைக்களமும் இணைந்து உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக முன்னெடுத்த கருத்தரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களமும் இணைந்து இந்த ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் புதிய பாடத்திட்டத்திற்கமைவாகத் தமிழ்ப்பாடத்திற்கான பரீட்சையை எதிர்கொள்ளும் வடபுல மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கை முன்னெடுத்திருந்தன. 

கடந்த வாரம் (11.02.2019 – 15.02.2019) ஐந்து நாட்கள் வவுனியா, வரணி, யாழ்ப்பாணம், மருதனார்மடம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய இடங்களில் வடபுலத்தின் 12 கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்;கக்கூடிய வகையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஏறத்தாழ 2400 மாணவர்கள் இக்கருத்தரங்குகளில் பங்கேற்றுப் பயன்பெற்றிருந்தனர்.

கருத்தரங்கின் வளவாளர்கள் தமிழ்ச்சங்கத்தின் கோரிக்கைக்கு மதிப்பளித்தும் மாணவர்களின் கல்விக்கு உதவும் நோக்குடனும் எவ்வித கொடுப்பனவுகளையும் பெறாமல் சேவை அடிப்படையில் பங்கேற்றிருந்தனர்.; 

தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் தகைசார் பேராசிரியர் அ.சண்முகதாஸ், உப தலைவர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், கிழக்கு பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராஜா, கிழக்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ், மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியர் நாக. தமிழிந்திரன், ஆசிரியர் ந.சத்தியவேந்தன் ஆகியோர் ஐந்து நாட்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். 

இவர்களுடன் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் அ.பௌநந்தி, பேராதனைப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர்களான கலாநிதி செ.சிவசுப்பிரமணியம், க.அருந்தாகரன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலஷண்முகன் ஆகியோர் பகுதியளவில் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் சார்பில் மாகாண தமிழ்ப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் வ.வசந்தகுமார் மேற்கொண்டார்.

Bookmark the permalink.

Leave a Reply