கோண்டாவில் இந்துக் கல்லூரியின் தொடர்பாடலும் ஊடகக் கற்கைநெறியும் பாட ஆசிரியரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க ஆட்சிக் குழு உறுப்பினருமாகிய திரு. ந.கணேசமூர்த்தி அகவை அறுபது எய்தி 21.09.2018 (வெள்ளி) அரச பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
22 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மானிப்பாய் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அறுபதாவது பிறந்த நாளைக் காண்கிறார்.
காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் சிறந்த மேடைப்பேச்சாளர்.பத்தி எழுத்தாளர் எனப் பல தளங்களில் ஆளுமை பெற்றவர்.
1980களின் பிற்பகுதியில் காரைநகரில் தமிழருவி த.சிவகுமாரன் அவர்களுடன் இணைந்து கம்பன் கழகம் நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தவர்.
காரைநகரை மையப்படுத்திய பல்வேறு அமைப்புக்களிலும் முக்கிய பதவி வகிக்கின்றார். 1996 இல் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரிய நியமனம் பெற்று கோப்பாய் ஆசிரிய கலாசாலையிலும் தனது தொழில்சார் பயிற்சியைப் பெற்றவர்.
வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளின் பிரதேசச் செய்தியாளராகப் பணியாற்றுகின்றார்.
திரு. ந.கணேசமூர்த்தி அவர்களின் ஓய்வுக்காலம் சிறப்புற வாழ்த்துகின்றோம்.