யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், பாடசாலைகளில் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடையே கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்திய திருக்குறள் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி முதலாம் இடத்தை அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவன் நி.சிவாஜனும் இரண்டாம் இடத்தை மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி ர.நிவேதாவும் மூன்றாம் இடத்தை மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி கோ.யனோவாவும் நான்காம் இடத்தை கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரி மாணவி யோ.நிவேதிதா மற்றும்
தெல்லிப்பழை மகாஜன கல்லூரி மாணவி ர.நிவோதினி ஆகியோரும் பெற்றுள்ளனர். இவர்களுடன் ஜே.ஜெறின் (வேலணை மத்திய கல்லூரி), வி.விக்னா (வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி) பி.ராதிகா (அளவெட்டி அருணோதயக் கல்லூரி), ந.தேனுஜா (அளவெட்டி அருணோதயக் கல்லூரி) சு.சஞ்சிகா (மகாஜனக் கல்லூரி), க.நிதுசா (வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி), ப.சுதர்மினி (சங்கானை சிவப்பிரகாச வித்தி), சி.பவதர்ஜினி (இளவாலை மெய்கண்டான் ம.வி.) செ.கீர்த்தனா (யாழ்ரன் கல்லூரி) க.கிந்துஷா ((வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி) ஆகியோர் திறமைச் சித்திகளைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் தமிழ்ச்சங்கமும் சிவகணேசன் புடைவையகமும் இணைந்து நடத்தவுள்ள வள்ளுவர் விழாவின் போது வழங்கப்படவுள்ளதாக தமிழ்ச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தேர்விற்குத் தோற்றிய அனைவரது பெறுபேறுகளையும் தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளத்தில் (www.thamilsangam.org) பார்வையிட முடியும் எனவும் அறிவித்துள்ளனர்.