யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் வள்ளுவர் விழா ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சிவகணேசன் புடைவையகமும் இணைந்து நடத்தும் திருவள்ளுவர் விழா எதிர்வரும் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்ச்சங்கத் தலைவர் விரிவுரையாளர் ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மலையகக் கிராமிய நடனம், திருக்குறளும் முகாமைத்துவமும் என்ற பொருளில் அமைந்த ஆய்வரங்கம், கொட்டகலை ஆசிரிய கலாசாலை ஆசிரியர்கள் வழங்கும் நாட்டிய நாடகம் என்பன இடம்பெறவுள்ளன. 
நிகழ்வில் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசும் சிறப்புரையை வள்ளுவரின் முற்போக்குச் சிந்தனைகள் என்ற பொருளில் கொட்டகல ஆசிரிய கலாசாலை அதிபர் சந்திரலேகா கிங்ஸ்லியும் ஆற்றவுள்ளனர். 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவக் கற்கைகள் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பியை தலைமையில் வள்ளுவர் வழி முகாமைத்துவம் என்ற பொருளில்

 
ஆய்வரங்கம் இடம்பெறவுள்ளது. இதில் திருக்குறளில் திட்டமிடல் என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளார் கலாநிதி சி.சிவேசனும், திருக்குறளில் ஒழுங்கமைத்தல் என்ற பொருளில்  கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் பாரதி கெனடியும் திருக்குறளில் ஆட்சேர்ப்பு என்ற பொருளில் திறந்த பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி வ.சிவலோகதாசனும் திருக்குறளில் வழிநடத்தல் என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணாவும் திருக்குறளில் கட்டுப்படுத்தல் என்ற பொருளில் கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயிலும் உரையாற்றவுள்ளனர். ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வள்ளுவர்வழி முகாமைத்துவம் என்ற பெயரில் நூலாக வெளியிடப்படும். இதனை தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வெளியிட்டு வைப்பார். 
 
பாடசாலைகளில் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட திருக்குறள் தேர்வு தொடர்பான பரிசளிப்பு வைபவமும் இடம்பெறவுள்ளது. இதனை போட்டி இணைப்பாளர் விரிவுரையாளர் கு. பாலஷண்முகன் நெறிப்படுத்துவார். நிறைவு நிகழ்வாக கொட்டகலை ஆசிரிய கலாசாலையினர் வழங்கும் உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் என்ற பொருளில் அமைந்த நாட்டிய நாடகம் இடம்பெறும். இந்நாட்டிய நாடகத்திற்குரிய நட்டுவாங்கம் – விரிவுரையாளர் சுமித்தா பிரசாந்தன், பாட்டு- ஜெ.மதுசிகன், வயலின் – ப.சியாமகிருஷ்ணா, மிருதங்கம் – க.நந்தகுமார்  ஆகியோர் பங்குகொள்ளவுள்ளனர். நன்றியுரையை பொதுச் செயலாளர் இ.சர்வேஸ்வராவும் நிகழ்ச்சித் தொகுப்பை: சி.சிவஸ்கந்தசிறியும் ஆற்றுவர்.
 
Bookmark the permalink.

Leave a Reply