யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு – தமிழாசிரியையின் பிரிவுக்காக அமைதிப் பிரார்த்தனையுடன் ஆரம்பம்

உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களின் நலன் கருதி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 20.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 3 மணி வரை நடைபெற்றது.
 
740 மாணவர்கள் பங்கேற்பதற்காக விண்ணப்பித்து அதில் 650 பேர் தேர்வுக்குத் தோற்றினர்.
 
தேர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அண்மையில் அகாலமரணமடைந்த தமிழாசிரியை கவிதா ஜெயசீலனின் ஆத்ம சாந்திக்காக அனைவரும் இரண்டு நிமிடங்கள் அமைதிப் பிராா்த்தனையில் ஈடுபட்டனர்.
 
தமிழ்ச்சங்க தேர்வு மேற்பார்வை அணியினருடன் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆசிரிய பயிலுநர்கள் 24 பேர் நோக்குநர்களாகப் பங்கேற்றனர்.
 
தேர்வு தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் நடைபெறுவதாகவும் எதிர்வரும் 23.05.2018 புதன் கிழமைக்கு முன்னர் பெறுபேறுகள் தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளத்தில் (www.thamilsangam.org) வெளியிட்டு வைக்கப்படும் என்றும் தேர்வு இணைப்பாளர் கு.பாலஷண்முகன் அறிவித்துள்ளார்.

 
இத்தேர்வில் வெற்றியீட்டியோருக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சிவகணேசன் புடைவையகமும் இணைந்து முன்னெடுக்கவுள்ள திருவள்ளுவர் விழாவின் போது வழங்கப்படவுள்ளன.
 (படப்பதிவு நன்றி – “அறம்“ வரலாற்று ஆவணப்படுத்தல் அணி)
Bookmark the permalink.

Leave a Reply