பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்
08.05.2016 இல் யாழ். சைவபரிபாலன சபை மண்டபத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. இது 19.03.2016 இல் இடம்பெற்ற ஆட்சிக் குழுக் கூட்டப் பரிந்துரையின் பிரகாரம் அமைந்திருந்தது. இதன்படி
பெருந்தலைவர் : பேராசிரியர் அ. சண்முகதாஸ் (தகைசார் வாழ்நாள் பேராசிரியர், யாழ்.பல்கலைக்கழகம்)
தலைவர் : பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் (ஆய்வுப் பேராசிரியர், கக்சுயின் பல்கலைக்கழகம், யப்பான்)
துணைத் தலைவர்கள் :
(1) பேராசிரியர் தி. வேல்நம்பி (பீடாதிபதி, முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம், யாழ். பல்கலைக்கழகம்)
(2) கலாநிதி ஆறு. திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை)
(3) பேராசிரியர் ம. இரகுநாதன் (தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
(4) அருட்பணி ஜெறோ செல்வநாயகம் (;பங்குத் தந்தை, பாசையூர்)
பொதுச் செயலாளர் : திரு. ச.லலீசன் ( பிரதி அதிபர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை)
துணைச் செயலாளர்கள் :
(1) கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் (தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
(2) திரு. கோ. ரஜனிகாந் (உரிமையாளர், பிரகாந் போட்டோ கொப்பி நிறுவனம், திருநெல்வேலி)
நிதிச் செயலாளர் : திரு. லோ. துஷிகரன் (மருத்துவ தொழினுட்பவியலாளர், யாழ். போதனா மருத்துவமனை)
ஊடகத் தொடர்பாளர் : திரு. இ.சர்வேஸ்வரா (சிரேஷ்ட உதவிப் பதிவாளர், உவாவெல்லச பல்கலைக்கழகம்)
ஆட்சிக்குழு உறுப்பினர்கள்
01. திரு. இரா. செல்வவடிவேல் (ஆசிரியர்)
02. திரு. சி. வன்னியகுலம் (ஓய்வு பெற்ற பணிப்பாளர், இலங்கை வானொலி)
03. திரு. கு .பாலஷண்முகன் (விரிவுரையாளர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை)
04. திரு. அ. பௌநந்தி (விரிவுரையாளர், கொழும்பு பல்ககைலக்கழகம்)
05. திரு. ந. ஐங்கரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், நீர்ப்பாசனத் திணைக்களம்)
06. திரு .ந. விஜயசுந்தரம் (பிரதம ஆசிரியர், வலம்புரி நாளிதழ்)
07. திரு. க. அருள்நேசன் (உரிமையாளர், சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ்)
08. திருமதி ரதி சந்திரநாதன் (ஓய்வுநிலை ஆசிரியர்)
09. திருமதி கௌரி முகுந்தன் (முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் – தமிழ், வடக்கு மாகாணம்)
10. திரு. பா. பாலகணேசன் (விரிவுரை இணைப்பாளர், யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி)
11. திரு. த. குமரன் (ஆசிரியர், யாழ். மத்திய கல்லூரி)
12. திரு. எஸ். சந்திரசேகர் (தமிழாசிரியர்)
13. கவிஞர் கு. ரஜீபன் (கலாசார உத்தியோகத்தர்)
14. திரு. த. அருட்குமரன் (ஆசிரியர், மானிப்பாய் இந்துக் கல்லூரி)
15. திரு. ந. கணேசமூர்த்தி (தமிழாசிரியர், கோண்டாவில் மகா வித்தியாலயம்)
16. திரு. நா. வை. மகேந்திரராஜா (குமரிவேந்தன்) (மின் பொறியியலாளர்)
17. திரு. ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ (சட்டத்துறை மாணவன், யாழ். பல்கலைக்கழகம்)
18. திரு. சி. சசீவன் (மக்கள் வங்கி உத்தியோகத்தர்)
19. திரு. இ. கஜானந்தன் (விரிவுரையாளர், யாழ். பல்கலைக்கழகம்)
20. திருமதி. ய. தனுஷியா
21. திரு. சி. ராஜ்குமார் (முகாமைத்துவப் பணிப்பாளர், கரிகணன் நிறுவனம்)
22. திரு வேல். நந்தகுமார் (ஆசிரியர், ஹாட்லி கல்லூரி, பருத்தித்துறை)
23. திரு. த. கருணாகரன் (சமுர்த்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், தென்மராட்சி)
புதிய நிர்வாகம் குறித்த ஒப்புதலை வழங்குவதாக திரு. ரி. கருணாகரன் முன்மொழிய திரு. கு. பாலஷண்முகன் வழிமொழிந்தார். ஆட்சேபனைகள் இல்லாத நிலையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதி விழா 2016
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதி விழா கடந்த 04.09.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி சைவவித்தியா விருத்திச்சங்க இல்லப் பிள்ளைகள் தமிழ்மொழி வாழ்த்து இசைத்தமையைத் தொடர்ந்து மானிப்பாய் கலைக்கோவில் நாட்டியப் பள்ளி மாணவிகள் அதன் இயக்குநர் செல்வாம்பிகை வீரசிங்கத்தின் நெறியாள்கையில் வரவேற்பு ஆடலை வழங்கினர். மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியர் த.அருள்குமரன் வரவேற்புரையாற்றினார்.
நாதஸ்வரக் கலாநிதி பி.எஸ்.பாலமுருகன் குழுவினரின் இன்னியம் பாரதி பாடல்களால் ஓர் கான மழையாக அமைந்திருந்தது. இதில் வயலின் – கே.ஆர்.எஸ்.கோபிதாஸூம் தவில் லயஞானபாலன் பி.எஸ்.செந்தில்நாதனும், மிருதங்கம் வ.ரமணாவும் கடம் கு.ரவிசங்கரும், கெஞ்சிரா ந.சிவசுந்தரசர்மாவும் மோர்சிங் சி.செந்தூரனும், தபேலா எஸ்.விமல்சங்கரும் இணைந்து கொண்டனர்.
பாரதி உலகமகாகவி என்ற பொருளில் தமிழகத்தின் சொற்பொழிவாளரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமாகிய ரவி கல்யாணராமனால் சிறப்புரை ஆற்றப்பட்டது. தொடர்ந்து உடுவில் நாட்டிய கலாகேந்திரா நாட்டியப் பள்ளி மாணவர்களால் அதன் இயக்குநர் கலாநிதி கிருஷாந்தி ரவீந்திராவின் நெறியாள்கையில் பன்முகப்பாரதி என்ற பொருளில் நாட்டிய நாடகம் அளிக்கை செய்யப்பட்டது.
நிறைவு ஆடலை உரும்பிராய் கலைக்கோவில் மாணவியர் அதன் இயக்குநர் பத்மினி செல்வேந்திரகுமாரின் நெறியாள்கையில் மோகினி ஆட்டமாக வழங்கினர்.
தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினரும் யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளருமாகிய பா. பாலகணேசன் நன்றியுரை ஆற்றினார்.
விழாவிற்கு சுவிஸில் உள்ள யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மற்றும் யாழ். சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ், கிருபா லேணர்ஸ், சுசீலா நகைமாளிகை, திருநெல்வேலி சிவன் ஸ்ரோர்ஸ் ஆகியன அனுசரணை வழங்கியிருந்தன.
ஈழத்து நூல்களின் கண்காட்சி
நல்லூர் திருவிழாவையொட்டி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த ஈழத்து நூல்களின் கண்காட்சியும் விற்பiனையும் கடந்த 17.08.2016 இல் ஆரம்பமாக திருவிழா முடியும் வரை நல்லூர் கம்பன் கோட்டத்தில் இடம்பெற்றது. தொடக்க நாள் வைபவம் சங்கத் தலைவ் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.சங்க உபதலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் கண்காட்சியைத் தொடக்கிவைத்தார். உபசெயலாளர் திரு. கோ. ரஜனிகாந்தன் நன்றியுரை ஆற்றினார்.
ஆடிப்பிறப்பு விழா
யாழ். முத்துத்தம்பி வித்தியாலயத்துடன் இணைந்து தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா 19.07.2016 அன்று சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. சங்க உப செயலாளர் கலாநிதி செ.சிவசுப்பிரமணியம் இதற்கு அனுசரணை வழங்கியிருந்தார். ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. அ.பௌநந்தி சிறப்புரை ஆற்றினார்.
டான் தொலைக்காட்சியில் பட்டிமண்டபம்
2016 ஆம் ஆண்டுக்கான நல்லூர் திருவிழாவின் போது யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் டான் தொலைக்காட்சியில் ஐந்து நாட்கள் பட்டிமண்டப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பேராசிரியர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் தி.வேல்நம்பி, திரு. இரா.செல்வவடிவேல், திரு. ச.லலீசன், திரு. கு. பாலசண்முகன் இந்நிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்தியிருந்தனர்.
நாவலர் விழா – 2016
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் கரிகணனும் இணைந்து முன்னெடுத்த நாவலர் விழா 24.12.2016 சனிக்கிழமை காலை 9 மணிக்கு நல்லூர் ஸ்ரீP துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறைவணக்கத்தை கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் வாசஸ்பதி ரஜீந்திரன் இசைத்தார். நாவலர் வணக்கச் சுடரை வாழ்நாள் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் ஏற்றினார். வரவேற்புரையை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர் திரு.வேல். நந்தகுமாரும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசும் ஆற்றினர்.
நாவலரின் தொலைநோக்கு என்ற பொருளில் ஆய்வரங்கம் இடம்பெற்றது. ஓய்வுபெற்ற பேராசிரியர் கலைவாணி இராமநாதன் தலைமையில் நடைபெற்ற ஆய்வரங்கில் நாவலரின் தொலைநோக்கில் சமயம் என்ற பொருளில் இந்துநாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசனும் நாவலரின் தொலைநோக்கில் கல்வி என்ற பொருளில் இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் திரு.சி.ரமணராஜாவும் நாவலரின் தொலைநோக்கில் மொழி என்ற பொருளில் இந்நுநாகரிகத்துறை விரிவுரையாளர் திரு. தி.செல்வமனோகரனும் நாவலரின் தொலைநோக்கில் பண்பாடு என்ற பொருளில் இந்து நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரனும் நாவலரின் தொலைநோக்கில் சமூகம் என்ற பொருளில் சமூகவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ச.ஸ்ரீகாந்தும் ஆய்வுரைகளை ஆற்றினர். ஓய்வுபெற்ற விரிவுரையாளர் திருமதி நாச்சியார் செல்வநாயகம் ஆய்வரங்கிற்கான தொகுப்புரையை ஆற்றினார்.
ஆய்வுரைகளின் தொகுப்பான நாவலரின் தொலைநோக்கு என்ற நூலினை வாழ்நாள் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் வெளியிட்டு வைக்க முதற்பிரதியை சைவமகாசபையின் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி ப. நந்தகுமார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து 30 பாடசாலைகளுக்கு கரிகணன் அன்பளிப்பாக மென்சீமெந்தில் அமைக்கப்பட்ட நாவலரின் திருவுருவச்சிலை வழங்கப்பட்டது. இந்தியத்துணைத் தூதர் ஆ.நடராஜன் வாழ்த்துரையாற்றி சிலைகளை வழங்கினார். நாவலரின் குடும்பத் தோன்றல்களான இரண்டு கொள்ளுபேரர்மாருக்கு நாவலர் சிலை வழங்கிவைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
நிறைவு நிகழ்வாக கலாஷேத்திராவின் நடன டிப்ளோமாதாரியாகிய திருமதி ஷாலினி வாகீஸ்வரசர்மாவின் பரத நாட்டிய ஆற்றுகை இடம்பெற்றது. நிகழ்வின் நிறைவில் சமுர்த்தி உத்தியோகத்தர் திரு ச.கருணாகரன் நன்றியுரை ஆற்றினார்.
கு.றஜீபனின் சீத்துவக்கேடு என்ற கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா
திரு. கு.றஜீபனின் சீத்துவக்கேடு என்ற கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா 18.12.2016 ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். நாவலர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்குத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமை தாங்கினார்.
நூலின் வெளியீட்டுரையை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா ஆற்றினார். நூலின் முதற்பிரதியை விரிவுரையாளர் அருள்நங்கை சண்முகநாதன் பெற்றுக்கொண்டார்.
கவிஞர் சோ.பத்மநாதன் ஆய்வுரை நிகழ்;த்தினார். இந்நூல் தமிழகத்தின் பூவரசி பதிப்பக வெளியீடாக வெளியிடப்பட்டது.
தளபாடங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன – 2016
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு தொகுதி தளபாடங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இதன் உத்தியோகபூர்வக் கையளிப்பு வைபவம் இன்று 18.10.2016 மாலை நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் திரு. த.நடனேந்திரன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. ச.லலீசனிடம் தளபாடங்களைக் கையளித்தார். நல்லூர் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. தி.மகேஸ்வரகுமார், உதவி திட்டமிடல் பணிப்பாளர் செல்வி.து.சுதர்சனா ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினரால் எழுபத்தையாயிரம் ரூபா பெறுமதியில்
அலுவலக மேசை (8 * 4 * 2.5) – 01
அலுவலக அலுமாரி உருக்கு (3 * 1.5 * 6) – 01
கோவை அலுமாரி (04 இறாக்கைகளுடன்) – உருக்கு – 01
கோவை தட்டு உருக்கு 4 * 1.5 * 6 – 01
கணினி மேசை (pkct 008) – 01
அலுவலக கதிரைகள் (pvc 001) – 04 ஆகியன வழங்கப்பட்டன.
ராஜ்குமார் பாரதியைச் சந்தித்துத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட நூல் கையளிக்கப்பட்டது.
இந்திய குடியரசு தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கான இந்தியத்துணைத் தூதரகத்தின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தினர் சந்தித்துத் (26.01.2017) தமது முதல் வெளியீடாக அமைந்த பாரதியின் புலமைத்திறன் என்ற நூலைக் கையளித்தனர். இதன்போது தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தான் எழுதிய அந்நூலைக் கையளித்தார். பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், பொதுச் செயலாளர் ச.லலீசன், துணைத்தலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் ஆகியோரும் உடனிருந்தனர்.
சி.வை.தா. நினைவரங்கம்
தமிழறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் 27.01.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் வரவேற்புரையை நா.வை. குமரிவேந்தனும் வாழ்த்துரையை சிறுப்பிட்டி சி.வை.தா. நினைவு மன்றத்தைச் சேர்ந்த திரு. செந்தில்நாதனும் தொடக்கவுரையை ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி கௌரி முகுந்தனும் ஆற்றினர். சி.வை.தா. குறித்த நினைவுப் பேருரையை யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் திருமதி செல்வஅம்பிகை நந்தகுமரன் ஆற்றினார். நன்றியுரையை ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. சி.சிவஸ்கந்தஸ்ரீ மேற்கொண்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு கரிகணன் நிறுவனத்தாரால் நாவலர் சிலைகள் வழங்கப்பட்டன.
சர்வதேச தாய்மொழி தினம்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு 20.02.2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வடமராட்சி இந்துமகளிர் கல்லூரியில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் வரவேற்புரையை ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. சி.வன்னியகுலமும் வாழ்த்துரையைப் பாடசாலை அதிபர் செல்வி தேவராணி நவரட்ணமும் ஆற்றினர். நிகழ்வில் தமிழ் மொழிக் கல்வியின் பயன்கள் என்ற பொருளில் பேராசிரியர் அ.சண்முகதாசின் சிறப்புரை இடம்பெற்றது. பாடசாலை மாணவர்களின் நான் யார்? என்ற நாடகமும் இடம்பெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு கரிகணன் நிறுவனத்தாரால் நாவலர் சிலைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
உயர்தரத்தில் தமிழ் போதிக்கும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த உயர்தர வகுப்புக்களில் தமிழ் போதிக்கும் ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்ட வழிகாட்டல் கருத்தரங்கு 04.03.2017 சனி, 05.03.2017 ஞாயிறு ஆகிய தினங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
முதல்நாள் நிகழ்வில் வடமாகாண தமிழ்ப்பாடத்திற்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி கௌரி முகுந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. ஈ.குமரன், தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சி.செல்வரஞ்சிதம், பேராசிரியர் கி. விசாகரூபன், விரிவுரையாளர் திருமதி செல்வஅம்பிகை நந்தகுமாரன், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவரும் வாழ்நாள் பேராசிரியருமாகிய அ.சண்முகதாஸ் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினர்.
இரண்டாம் நிகழ்வில் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் திரு. ச.லலீசன் வரவேற்புரை நிகழ்த்தினார். யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் க.அருந்தாகரன், விரிவுரையாளர் திரு. ஈ.குமரன் கோப்பாய் ஆசிரிய கலாசாலை முன்னாள் பிரதி முதல்வர் கலாநிதி செ.திருநாவுக்கரசு ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளரின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.
வடமாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்ட இச்செயலமர்வில் கலந்து கொண்ட யாவருக்கும் புதிய பாடத்திட்டத்தைக் கற்பிப்பது தொடர்பான கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.
கருத்தரங்கு வெற்றிகரமாக இடம்பெற வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் தனது திணைக்களம் சார்ந்த அனுமதியை வழங்கியிருந்தார்.
நிகழ்வில் பங்கேற்ற வளவாளர்களும் இலவசமாகவே தமது சேவைகளை நல்கினர் என்பது இங்கு நன்றியுடன் குறிப்பிடத்தக்கது.
சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம்
லண்டனில் வசிக்கும் திரு. வைரவநாதன் சிவரதனின் ஆதரவுடன் நடத்தப்பட்ட சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம் 10.03.2017 அன்று காலை 11.30 மணிக்கு சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. இ.சர்வேஸ்வரா வரவேற்புரை ஆற்றினார். ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் திரு. மு.செல்வஸ்தான் வாழ்த்துரை வழங்கினார். ஈழத்து மரபுவழிப் புலமைத்துவமும் குமாரசுவாமிப் புலவரும் ஓர் அறிமுகக் குறிப்பு என்ற பொருளில் ஆட்சிக் குழு உறுப்பினர் திரு. கு. றஜீபன் நினைவுரை ஆற்றினார். பாடசாலை மாணவர்களின் ஆடல் அளிக்கை இடம்பெற்றது. பாடசாலை ஆசிரியர் திரு. பா. பாலமுரளி நன்றியுரை நல்கினார்.
ஆண்டுப் பொதுக்கூட்டம்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் நடப்பு நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தமையை ஒட்டி நடத்தப்பட்ட ஆண்டுப் பொதுக்கூட்டம் 23.07.2017 ஞாயிற்றுக்கிழமை யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. 27 அங்கத்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஆடிப்பிறப்பு விழா
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணன் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 17.07.2017 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் வரவேற்புரையை யாழ். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் தனித்தமிழ் ஆர்வலர் எந்திரி. நா.வை. குமரிவேந்தனும் சிறப்புரைகளை கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளர் திரு. தி.யோண்குயின்ரஸ், யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் திரு. த.சத்தியமூர்த்தி ஆகியோரும் ஆடிப்பிறப்பின் சிறப்புக் குறித்த உரையை யாழ். தமிழ்ச்சங்;கப் பெருந்தலைவர் தகைசார் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாசும் நன்றியுரையை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினரும் கரைச்சிப் பிரதேச கலாசார உத்தியோகத்தருமாகிய திரு. கு.ரஜீபனும் ஆற்றினர்.
கிளிநொச்சி கல்வி வலயத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு கரிகணன் நிறுவனத்தாரால் நாவலர் திருவுருவச் சிலைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மகாதேவ சிறுவர் இல்லப்பிள்ளைகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருவள்ளுவர் விழா 2017
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருவள்ளுவர் விழா 13.05.2017 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.
யாழ். பெரியகடை சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ் நிறுவன ஆதரவில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ் உரிமையாளர் லயன். கனகசபை அருள்நேசன் மங்கல விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைமாணி தெ.திருவேரகன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார். வரவேற்புரையை யாழ். பல்கலைக்கழகச் சட்டத்துறை மாணவன் ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீயும் வாழ்த்துரையை கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச்சங்கத் தலைவர் நா.சோதிநாதனும் ஆற்றினர். சொல்லின் செல்வர்; இரா.செல்வவடிவேல் ஆசிரியர் ‘உள்ளுவதெல்லாம் வள்ளுவம்’ என்ற பொருளில் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு நடன நிகழ்வாக மேகிலா சிவஞானசுந்தர ஐயரின் நெறியாள்கையில் நல்லூர் சிவநர்த்தனாலய மாணவர் வழங்கிய குறள்வழி நடனம் இடம்பெற்றது. இதில் நட்டுவாங்கம் சி.மேகிலா, பாட்டு ஜெ.மதுசிகன், வயலின் கலைச்சுடர் வ.மங்கைலட்சுமி, மிருதங்கம் ம.வினோகாந் ஆகியோர் மேற்கொண்டனர்.
பல்துறை வள்ளுவம் என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவன் ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ஸ்ரீ தலைமையில் சிந்தனை அரங்கு நடைபெற்றது. இதில் திருவள்ளுவர் ஒரு இலக்கியவாதி என கலைப்பீட மாணவி ப.கதிர்தர்சினியும் திருவள்ளுவர் ஒரு மருத்துவர் என மருத்துவபீட மாணவன் ப.பிரதீசும் திருவள்ளுவர் ஒரு சட்டத்தரணி என சட்டத்துறை மாணவி க.துளசியும் திருவள்ளுவர் ஒரு முகாமைத்துவவாதி என வணிகத்துறை மாணவன் சி.யசோகுலனும் கருத்துரையாற்றினர். நிகழ்வின் நிறைவில் வாழ்க தமிழ் என்ற பொருளில் எஸ்ரி.குமரன், எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரது நெறியாள்கையில் புத்தாக்க அரங்க இயக்கக் கலைஞர்கள் வழங்கிய நாடகம் இடம்பெற்றது.
தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் நன்றியுரை ஆற்றினார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர் வேல். நந்தகுமார் நிகழ்ச்சிகளை முன்னிலைப்படுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினரால் கதிரைகள் அன்பளிப்பு
கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினருமாகிய கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள் தமிழ்ச்சங்கத்தின் பாவனைக்கென 45 கதிரைகளை (NILKAMAL CHAMP) அன்பளிப்புச் செய்துள்ளார். பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இக்கதிரைகளைக் கையளிக்கும் வைபவம் கடந்த 10.08.2017 வியாழக்கிழமை காலை நல்லூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கத்தின் சார்பில் உபசெயலாளர்களுள் ஒருவராகிய திரு. கோ.ரஜனிகாந் (பிரகாந்) பாராளுமன்ற உறுப்பினரின் செயலரிடமிருந்து அன்பளிப்பைப் பெற்றுக்கொண்டார்.
சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம் நிகழ்வு 27.10.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது..
.
நிகழ்வில் வரவேற்புரையை தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் இரா.செல்வவடிவேலும் வாழ்த்துரையை நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் ஆற்றினர்.
.
தமிழியல் வளர்ச்சியில் ஈழத்து அறிஞர்களின் வகிபாகம் என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இவ்வரங்கத்தில் சுவாமி விபுலானந்தர் என்ற பொருளில் தென்கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரனும் சதாவதானி நா.கதிரைவேற்பிள்ளை என்ற பொருளில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி சி.பத்மராஜாவும் வண.தனிநாயகம் அடிகள் என்ற பொருளில் தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வுநிலை பேராயர் அதிவண. கலாநிதி சு.ஜெபநேசன் அடிகளாரும் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருமதி ஜெயலஷ்மி இராசநாயகமும் கருத்துரை வழங்கினர். தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் ச.லலீசன் நன்றியுரை நல்கினார்.
.
நிகழ்வில் கட்டுரை வழங்கிய பேராளர்கள் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். இதற்கான அனுசரணையை பொதுச் செயலாளர் திரு. ச.லலீசன் வழங்கியிருந்தார்.
நாவலர் விழா
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணனுடன் இணைந்து முன்னெடுத்த நாவலர் விழா கடந்த 23.12.2017 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பேராசிரியர் மா.வேதநாதன் தலைமை வகித்தார். வரவேற்புரையை ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. கு. பாலஷண்முகன் வழங்கினார். தொடக்கவுரையை தமிழ்ச்சங்க தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் ஆற்றினார். சிறப்புரையை கலாநிதி யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை தலைவர் கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் ஆற்றினார். சைவத்திருமகன் என்ற பொருளில் நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா வழங்கிய ஆடல் அளிக்கை, சிறுவர்களை வழிப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பவர் பெற்றோரா ஆசிரியரா என்ற பொருளில் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. இரா. செல்வவடிவேல் தலைமையில் அமைந்த பட்டிமண்டபம் என்பன இடம்பெற்றன. நன்றியுரையை பொதுச் செயலாளார் திரு. ச.லலீசன் ஆற்றினார்.
பாரதி நினைவரங்கம்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதி நினைவரங்கம் கடந்த 30.12.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லை ஆதீன கலாமண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை திரு. வேல்.நந்தகுமாரும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசும் ஆற்றினர்.
தென்கிழ்க்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன் பாரதியும் இயற்கையும் என்ற பொருளில் உரையாற்றினார்.
தொடர்ந்து கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற பொருளில் கவியரங்கம் இடம்பெற்றது. இக்கவியரங்கில் கவிஞர்களான த.ஜெயசீலன், கு.றஜீபன், இ.சு.முரளிதரன், தர்மினி றஜீபன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்ச்சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் ஸ்ரீP. சிவஸ்கந்தஸ்ரீ நன்றியுரை ஆற்றினார்.
வாழ்த்துகிறோம்
கலாபூஷணம் நா.வை.குமரிவேந்தன்
முப்பத்து மூன்றாவது அரச கலாபூஷணம் விருது வழங்கும் விழாவில் (2017) இலக்கியத்துறைக்கான கலாபூஷணம் விருதைப் பெற்ற தனித்தமிழ் ஆர்வலர் , யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. நா.வை. குமரிவேந்தன் (மகேந்திரன்) அவர்களுக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் மகிழ்வடைகின்றது.
நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது கிளிநொச்சியில் வெற்றி நகரில் (ஜெயந்தி நகர்) வசிக்கின்றார். வருடந்தோறும் திருவள்ளுவர் நாள்காட்டியை வெளியிட்டு வருகின்றார். இதைவிட தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் நூல்களையும் ஆக்கி வெளியிட்டுள்ளார்.
அருட்பணி ஜெறோ செல்வநாயகம்
புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றிய சங்கத்தின் உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அகவை அறுபதை அடைந்து அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது பாசையூர் பங்குத் தந்தையாகப் பணிப்பொறுப்பை ஏற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்.
துயர்பகிர்கிறோம்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளருமாகிய திரு.கு.பாலஷண்முகனின் தாயார் சிவபாக்கியம் குமரேசன் கடந்த 15.07.2017 அன்று காலமானார். இறுதிக் கிரியைகள் 16.07.2017 அன்று கொக்குவில் கருவேலடி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் திரு. ச.லலீசன் தலைமையில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. வலம்புரி நாளிதழில் அஞ்சலி விளம்பரமும் பிரசுரிக்கப்பட்டது. அவரது பிரிவால் துயருறும் யாவருக்கும் எமது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழ்ச்சங்க உபதலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் தாயார் திருமதி சரஸ்வதி ஆறுமுகம் கடந்த 14.12.2016 இல் காலமானார். தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வலம்புரி நாளிதழில் கண்ணீர் அஞ்சலி விளம்பரம் பிரசுரிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரும் சங்கத்தின் ஆயுட்கால அங்கத்தவரும் சங்கத்திற்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்து தளபாடக் கொள்வனவுக்கு வழிசமைத்தவருமாகிய கௌரவ சிவஞானம் சிறிதரனின் தந்தை 24.05.2016 இல் காலமானார். தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நேரில் கலந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத் தலைவர் திரு. தி.இராசநாயகம் கடந்த 01.11.2017 இல் காலமானார். அவரது ஆதரவுடன் தமிழ்ச்சங்கத்தார் ஆடிப்பிறப்பு விழாவை அங்கு முன்னெடுத்திருந்தனர். தமிழ்ச்சங்க பெருந்தலைவர், தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் நேரில் சமுகமளித்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக் குழுக்கூட்டங்கள்
தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழுக் கூட்டங்கள் பின்வரும் திகதிகளில் சங்கத் தலைவரது வீட்டில் (சங்கத்தின் தற்காலிகப் பணிமனை நடைபெற்றது) 14.05.2016, 08.08.2016, 14.11.2016, 08.01.2017, 19.02.2017, 28.03.2017, 11.05.2017, 20.06.2017, 12.08.2017, 05.11.2017. 2018 ஆம் ஆண்டு தொடக்கம் சங்கக் கூட்டம் நல்லை ஆதீனத்தில் உள்ள சிறுமண்டபத்தில் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் 31.01.2018, 22.02.2018 இல் இத்தகைய கூட்டங்கள் இடம்பெற்றன.
யாப்புத் திருத்தக் கூட்டம்
தமிழ்ச்சங்கத்தின் யாப்பை நுணுகி ஆராய்ந்து மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு 04.11.2017, 11.11.2017, 25.11.2017 ஆகிய நாட்களில் சந்தித்து யாப்பில் திருத்தங்களை மேற்கொண்டது. இது 22.02.2018 இல் நிகழ்ந்த ஆட்சிக்குழுக் கூட்டத்தின் போது ஆட்சிக்குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எதிர்வரும் 11.03.2018 இல் இடம்பெறவுள்ள பொதுச்சபைக் கூட்டத்தில் இச்சீர்திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படவுள்ளது.
சங்கத்தின் இணையம்
தமிழ்ச்சங்கத்தின் இணையத்தளத்தில் மேலதிக விபரங்கள் மற்றும் படங்கள் காணொலிகளைப் பார்வையிடலாம். முகவரி www.thamilsangam.org இணையத் தளத்தை வடிவமைத்து அதற்கான ஆண்டுச் சந்தாவை திரு. த.தவரூபன் (யாழ். பல்கலைக்கழக உத்தியோகத்தர்) தனது தமிழ்ப்பணியாக வழங்கி வருகின்றார். ஆட்சிக் குழு உறுப்பினர் திரு. இ.சர்வேஸ்வரா இணையத் தளத்தைப் பதிவேற்றம் செய்கிறார்.
சங்கத்திற்காக இலவச போட்டோப்பிரதி சேவை
சங்கத் தேவைகளுக்காக தனது தமிழ்ப்பணியாக போட்டோப் பிரதி சேவையை இலவசமாக வழங்கிவரும் திருநெல்வேலி பிரகாந் போட்டோ கொப்பி நிறுவனத்தாருக்கு நன்றி.
இலவச மண்டபம்
தமிழ்ச்சங்கத்தின் கூட்டங்களை நடத்துவதற்கு நல்லை ஆதீன மண்டபத்தை இலவசமாக வழங்க வண. சுவாமிகள் முன்வந்துள்ளார். தமிழ்ப்பணியாகக் கருதி சுவாமிகள் நல்கும் உதவிக்கு நன்றி. அதே வேளை எமது வேண்டுகோளுக்கு இணங்கி இலவச மண்டப வசதிகளை வழங்கிய கம்பன் கோட்டத்தார், நாவலர் மணிமண்டபத்தார், சைவபரிபாலன சபையார் ஆகியோருக்கும் நன்றி.
நன்றி
கடந்த ஈராண்டுக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கச் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த அத்தனை உள்ளங்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ச.லலீசன்
பொதுச் செயலாளார்
(தொலைபேசி : 0773787358)