சிறப்புற இடம்பெற்ற சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் நினைவரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியும் இணைந்து முன்னெடுத்த சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம் கடந்த 10.03.2017 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இங்கிலாந்தில் வாழும் வைரவநாதன் சிவரதனின் ஆதரவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வராவும் வாழ்த்துரையை கல்லூரி அதிபர் மு.செல்வஸ்தானும் வழங்கினர்.
நிகழ்வில் நினைவுப் பேருரையை ஈழத்து மரபு வழிப் புலமைத்துவமும் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரும் – ஓர் அறிமுகக் குறிப்பு என்ற பொருளில் கரைச்சி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரும் ஸ்கந்தவரோதயனுமாகிய கவிஞர் கு. றஜீபன் ஆற்றினார். கல்லூரி ஆசிரியர் உதயபாரதி ஐங்கரனின் நெறியாள்கையில் கல்லூரி மாணவியர் வழங்கிய ஆடல் அளிக்கையும் இடம்பெற்றது. கல்லூரி ஆசிரியர் பா.பாலமுரளி நன்றியுரை நல்கினார்.
.நிகழ்வில் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், பொதுச் செயலாளர் ச.லலீசன், வடமாகாண தமிழ்ப்பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் கௌரி முகுந்தன், தனித்தமிழ் ஆர்வலர் மினபொறியியலாளர் நா.குமரிவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
Bookmark the permalink.

Leave a Reply