யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் செயலாளர் அறிக்கை – 2012 தொடக்கநாள் கூட்டம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்கக் கூட்டம் நாவலர் கலாசார மண்டபத்தில் 10.06.2012 பிற்பகல் 4 மணிக்கு தகைசார் வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. முதலில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் திரு. ச. லலீசன் “நீராரும் கடலுடுத்த…” எனத் தொடங்கும் தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலை இசைத்தார். தொடர்ந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது. 1901 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சங்கம் ஒன்று அமைந்திருந்தமையை நினைவு கூர்ந்த பேராசிரியர்ää கொழும்புää மன்னார்ää கிளிநொச்சியில் தமிழ்ச் சங்கங்கள் சிறப்பாக இயங்குவதையும் நினைவு கூர்ந்தார். யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சங்கம் அமைக்கப்படாமை குறித்துப் பலரும் தம்மிடம் பிரஸ்தாபித்ததாகவும் அதன் விளைவாக 15.04.2012 இல் தனது இல்லத்தில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும் இன்று இச்சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்படுவதாகவும் கூறினார். தமிழ்ச் சங்கத்திற்காகத் தெரிவுசெய்யப்பட்ட தற்காலிக நிர்வாகக் குழுவினரின் விபரத்தையும் சபையில் வாசித்;துக் காட்டினார். யாழ்ப்பாணத்தில் பண்பாடுää கலாசாரம் தமிழ்ப் பற்று முதலியன வீழ்ச்சியடைந்து வருகின்றன. இவற்றிலிருந்து தமிழைக் காப்பது தமிழ்ச் சங்கத்தின் கடமையெனவும் குறிப்பிட்டார். இது ஒரு தற்காலிகக் குழு. தொடர்ந்து அங்கத்தவர்களை இணைத்தபின் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு நிரந்தரக் குழு அமைக்கப்படும் என்றார். பொதுச் செயலாளர் இரா. செல்வவடிவேல் உரையாற்றுகையில்: பலரது வேண்டுகோள்களுக்கு அமையவே தமிழ்ச் சங்கம் அமைக்கப்படுவதாகவும் பத்திரிகைகளில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களிற்கூட இதன் தேவை பகிரப்பட்டதாகவும் கூறினார். யாழ். மாவட்டத்தில் மாணவர்களின் தமிழ்மொழிப் பாட அடைவும்ää தமிழ் மொழித் திறனும்ää வாசிப்புää எழுத்துத் தேர்ச்சிகளும் குன்றி வருவதாகவும் கவலை வெளியிட்டார். இன்றைய இளைய தலைமுறையினரிடையே மொழிப்பற்றை ஊட்டப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களும் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் முன்னெடுத்த சொல்லாடுகளம் நிகழ்ச்சி பற்றியும் பாராட்டிக்; கூறினார். பொருளாளர் பேராசிரியர் தி. வேல்நம்பி உரையாற்றுகையில் : தமிழ்ப் பற்றும் இலக்கிய ஈடுபாடும் கொண்ட இச்சபையினர் சமூகத்திற்கு அவற்றை ஊட்ட வேண்டும் என்றார். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் படிப்படியாக வளர்ச்சியடையும் என நம்பிக்கை வெளியிட்டார். பாடசாலை மாணவர்களைச் சங்கத்தில் இணைக்கப்பல்வேறு நிகழ்வுகள் தேவை என்றார். மதகுருமார்ää பேராசிரியர்கள்ää பத்திரிகையாளர்கள் இவ்வமைப்பில் அங்கம் வகிப்பது சிறப்பைத் தருகிறது என்றும் குறிப்பிட்டார். சங்கத்தின் நிதியீட்ட நடவடிக்கை பற்றி ஆராயப்பட்டது. ஆயள் சந்தாவாக மூவாயிரம் ரூபாவை அறவிடுவதெனவும் ஆண்டுச் சந்தாவாக இருநூற்றைம்பது ரூபாவை அறவிடுவதெனவும் மாணவர் சந்தாவாக ஐம்பது ரூபாவை அறவிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் யாழ். பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளையில் நடைமுறைக் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதெனவும் இதனைத் தலைவரும் பொருளாளரும் இணைந்து செயற்படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து அவையில் இருந்த தமிழ்ச் சங்க ஆட்சிக் குழு உறுப்பினர்கள் கருத்துரைத்தனர். யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி. விசாகரூபன் கருத்துத் தெரிவிக்கையில்;: இது நல்லதோர் முயற்சியாகும். தற்போது தமிழ்ச் சங்கத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள அங்கத்தவர்கள் அனைவரும் ஆற்றல் படைத்தவர்களாவர் என்றார். இச்சங்கத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் பிராந்திய அடிப்படையிலும் சங்கங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். மதுரைத் தமிழ்ச் சஙகத்தின் ‘செந்தமிழ்’ää பேராதனைத் தமிழ்ச் சங்கத்தின் ‘இளங்கதிர்’ää யாழ். பல்கலைக் கழகத்தின் ‘சிந்தனை’ போன்று ஆய்விதழ்கள் வெளியிடப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். தமது தமிழ்த்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமெனவும் தெரிவித்தார். தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் கலாநிதி எஸ். ஜெபசேன் உரையாற்றுகையில்: பாரதி விழா அல்லது வேறு பெயரில் அமைந்த காத்திரமான விழா ஒன்றைத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார். பாடசாலைகளிற்கு சென்று தமிழ்ப் பற்றை விழிப்படையச்; செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்: தமிழ் மொழி பற்றிய சிந்தனைகளை நாடுää வீடுää சமூகம் எனக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் மாணவர்கள்ää ஆசிரியர்கள்ää பெற்றோர்கள் தமிழின் பெருமையை உணர்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். தற்போதுள்ள பண்பாட்டுச் சிதைவுகளுக்குப் பெற்றோரும் ஆசிரியர்களும் வகை கூற வேண்டும் என்றார். மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையாவது நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் எனவும் இவை பிரதேச ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். யாழ். பல்ககைலக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையப் பணிப்பாளர் திரு. தே. தேவானந் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்: பேராசிரியர் கா. சிவத்தம்பி முன்மொழிந்த “தமிழை வளர்ப்போம். தமிழால் இணைவோம்” என்ற வாசகத்தைத் தமிழ்ச் சங்கத்தின் மகுட வாசகமாகப் பயன்படுத்தலாம் என ஆலோசனை கூறினார். தமிழ்நாட்டிலும் பெங்களுரிலும் யாழ்ப்பாணத் தமிழிற்குக் கிடைக்கின்ற மதிப்புக்களை எடுத்துக் கூறினார். கிளிநொச்சி மாவட்டக் கலாசார உத்தியோகத்தர் திரு. கு. ரஜீபன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்: வித்துவான் பரீட்சை பண்டிதர் பரீட்சை போன்ற பரீட்சைகளைத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார். தமிழ்ச் சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பாகத் தனது பதவி சார்ந்த அனுபவங்களைக் கொண்டு ஆலோசனைகளை நல்கினார். வலம்புரிப் பத்திரிகையின் ஆசிரியரும் பாடசாலை அதிபருமாகிய திரு. ந. விஜயசுந்தரம் கருத்துத் தெரிவிக்கையில்: தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு கட்டடம் அவசியம் எனவும் காணி வாங்குவதற்குத் தயாராகிவிட்டால் திருநெல்வேலிப் பகுதியில் தன்னால் ஒரு காணியை இனங்காட்ட முடியும் எனவும் தெரிவித்தார். பல்வேறு அறப்பணிகளை முன்னெடுத்து வருகின்ற பெருமக்களுடன் தொடர்புகொண்டு இது விடயமாகப் பேசலாம் எனவும் ஆலோசனை நல்கினார். பொதுமக்கள் நினைவு மலரை வெளியிட ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ்ச் சங்கம் அத்தகையவர் பெயரால் ஒரு நிதியைப் பெற்று அரிய நூல் ஒன்றைப் பதிப்பித்து வெளியிடலாம் எனவும் தெரிவித்தார். புனித. பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்திரு ம. ஜெறோ செல்வநாயகம் புதிய செயற்குழுவுக்கு வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றினார். அனைத்துக் கருத்துக்களுக்கும் நன்றி தெரிவித்து நிறைவுரையாற்றிய பேராசிரியர் அ.சண்முகதாஸ்ää தமிழ்ச் சங்கத்திற்கென யாப்பு தயாரிப்பதெனவும் கொழும்புத் தமிழ்ச்சங்க யாப்பை அடியொற்றி இதனைத் தயாரிப்பது சிறந்தது எனவும் ஆலோசனை தெரிவித்தார். தொடக்கநாள் கூட்டம் பிற்பகல் 5.45 மணிக்குக் கூட்டம் இனிதே நிறைவேறியது. பத்திரிகையாளர் சந்திப்பு தமிழ்ச் சங்கத்தை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைக்கும் நோக்குடனும் 11.09.2012 இல் முன்னெடுத்த பாரதிவிழாத் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையிலும் 02.09.2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்குப் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. இச்சந்திப்பில் தமிழ்ச் சங்கம் சார்பில் பேராசிரியர் அ.சண்முகதாஸ்ää திரு. இரா. செல்வவடிவேல்ää பேராசிரியர் தி.வேல்நம்பிää பேராசிரியர் கி. விசாகரூபன்ää கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் ää திரு. ச.லலீசன்ää திரு. லோ. துஷிகரன் ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தனர். இவ்விளக்கங்கள் எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டன. பாரதிவிழா யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில்; செப்ரெம்பர் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாரதி விழா சிறப்பாக நடத்தப்படவுள்ளது. தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகளார் பெயரில் அமைந்த அரங்கில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் காலை மாலை அமர்வுகளாக நிகழ்வுகள் இடம்பெற்றன.காலை அமர்வு வண. கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளார் தலைமையில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் வரவேற்புரையை லோ.துஷிகரனும் வாழ்த்துரையை சோ.இ.பிரணதார்த்திஹரக்குருக்களும் வழங்கினர். எங்கள் பார்வையில் பாரதி என்ற தலைப்பில் மாணவர் அரங்கம் இடம்பெற்றது. இதனை திரு. சிவ.மகாலிங்கம் நெறிப்படுத்தினார். மாணவரின் பயன்பாட்டிற்கேற்றவகையில் மகாகவி பாரதி என்ற இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் வெளியீட்டுரையை தமிழ்ச் சங்கத் துணைச் செயலர் ச.லலீசன் ஆற்றினார். இறுவெட்டின் முதற்பிரதியை யாழ். சிவகணேசன் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் க.அருள்நேசன் பெற்றுக்கொண்டார். பாரதியின் பன்முக ஆளுமையும் புனைதிறனும் என்ற பொருளில் சிறப்புரை இடம்பெறவுள்ளது. இதனை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழிபண்பாட்டுத்துறை தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா வழங்கினார். பாரதி விழாவையொட்டித் தமிழ்ச் சங்கத்தின் மாணவ அங்கத்தவரிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டவர்களிற்குப் பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டன.; காலை அமர்விற்கான நன்றியுரையை திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் ஆற்றினார். மாலை அமர்வு தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் வரவேற்புரையை தமிழ்ச் சங்கத் துணைச் செயலர் ஆசிரியர் நாக. தமிழிந்திரன் வழங்கினார். கவிஞர் சோ. பத்மநாதன் தலைமையில் ‘கனவு மெய்ப்படவேண்டும்’ என்ற பொருளில் கவியரங்கம் இடம்பெற்றது. இதில் கவிஞர் த.ஜெயசீலன்ää கவிஞர் கு. றஜீபன்ää கவிஞர் த. நாகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர். பாரதி கண்ட தெய்வீகம் என்ற பொருளில் சிறப்புரை இடம்பெற்றது. இதனை தமிழ்ச் சங்க உப தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து யாழ். கனகரத்தினம் மத்திய ம.வி. வழங்கும் ஆடலளிக்கை இடம்பெற்றது. பாரதியின் புலமைத்துவம் என்ற நூல் வெளியீடு இடம்பெற்றது. கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களால் எழுதப்பட்ட இந்நூலை யாழ்.கரிகணன் பதிப்பகத்தார் இலவசமாக பதிப்பாக்கம் செய்து நூலாக வழங்கினர். இதன் வெளியீட்டுரையை வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் வழங்கினார். அறிமுகவுரையை பேராசிரியர் கி.விசாகரூபன் வழங்கினார். யாழ். நாட்டார் வழக்கியல் கழகம் வழங்கிய பாஞ்சாலி சபதம் என்ற இசை நாடகம் நிறைவு நிகழ்வாக இடம்பெற்றது. இதன் நெறியாள்கையை கலாநிதி த.கலாமணி மேற்கொண்டார். நன்றியுரையை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கச் செயலர் இரா. செல்வவடிவேல் வழங்கினார். காலை நிகழ்ச்சிகளை கலாநிதி மனோன்மணி சண்முகதாசும் மாலை நிகழ்வுகளை தமிழ்ச் சங்கப் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் முன்னிலைப்படுத்தினர். காலை மாலை அமர்வுகளில் மண்டபம் நிறைந்த அளவு பார்வையாளர் பங்கேற்றுப் பயன்பெற்றனர். 22.09.2012 இல் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலைவரப்படி ஆயுள் அங்கத்தவர்களாக 22 பேரும் ஆண்டுச் சந்தா நல்கும் அங்கத்தவர்களாக 100 பேரும் மாணவ அங்கத்தவர்களாக 114 பேரும் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். ஆலயச் சொற்பொழிவு வண்ணை வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் இவ்வாண்டு இடம்பெற்ற பெருந்திருவிழாவின்போது யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் சொற்பொழிவுகள் இடம்பெற்றன. இதன்போது பேராசிரியர் அ.சண்முகதாஸ்ää கலாநிதி ஆறு.திருமுருகன்ää திரு.ச.லலீசன் திரு. நாக. தமிழிந்திரன் ஆகியோர் தமக்குச் சன்மானமாக வழங்கப்பட்ட முழுத்தொகையையும் தமிழ்ச் சங்கத்திற்காக வழங்கினர். நன்றி தமிழ்ச் சங்கத்தின் தொடக்கம் முதல் நிரந்தர நிர்வாகம் அமைப்பதற்காக இடம்பெறுகின்ற பொதுக்கூட்டம் இடம்பெறும் காலப்பகுதிவரை சங்கத்தின் செயற்பாட்டிற்காக ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய அன்புள்ளங்கள் யாவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகள் மேலும் சிறப்படைய தங்கள் ஆதரவை இனிவருங்காலங்களில் நல்கி உதவுமாறும் வேண்டுகின்றோம். நன்றி இரா.செல்வவடிவேல் பொதுச்செயலாளர்
தளத்தின் அகத்தே
-
பதிவுகள்
- தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 2024
- சிறப்புற நடைபெற்ற தமிழ்ச் சங்கத்தின் ஆடிப்பிறப்பு விழா
- தமிழ்ச்சங்கத்தின் ஆடிப்பிறப்பு விழாவும் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் நவாலியில்
- யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு பதவி ஏற்றது
- தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் நிகழ்வுகள்
- அமரர்.திருமதி.மேனகா தனபாலசிங்கம் அவர்களுக்கு தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகள்
- காரை கவிஞர் வடிவழகையனின் கவிதை நூல்களின் வெளியீட்டு விழா
- பாரதியார் பிறந்தநாளில் தமிழ்ச் சங்க வழிபாடு
- சிறப்புற்ற தமிழ்ச் சங்கத்தின் நாவலர் நினைவரங்கம் -2021
- சைவத் தமிழின் செழுமையைப் பேண உழைத்த பெருந்தகை சைவப்புலவர் சு.செல்லத்துரை
மேனாள் தலைவரின் அகத்தின் கண்…
கருத்துமையம்