யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதி விழா கடந்த 04.09.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
.
திருநெல்வேலி சைவவித்தியா விருத்திச்சங்க இல்லப் பிள்ளைகள் தமிழ்மொழி வாழ்த்து இசைத்தமையைத் தொடர்ந்து மானிப்பாய் கலைக்கோவில் நாட்டியப் பள்ளி மாணவிகள் அதன் இயக்குநர் செல்வாம்பிகை வீரசிங்கத்தின் நெறியாள்கையில் வரவேற்பு ஆடலை வழங்கினர். மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியர் த.அருள்குமரன் வரவேற்புரையாற்றினார்.
.
நாதஸ்வரக் கலாநிதி பி.எஸ்.பாலமுருகன் குழுவினரின் இன்னியம் பாரதி பாடல்களால் ஓர் கான மழையாக அமைந்திருந்தது. இதில் வயலின் – கே.ஆர்.எஸ்.கோபிதாஸ_ம் தவில் லயஞானபாலன் பி.எஸ்.செந்தில்நாதனும், மிருதங்கம் வ.ரமணாவும் கடம் கு.ரவிசங்கரும், கெஞ்சிரா ந.சிவசுந்தரசர்மாவும் மோர்சிங் சி.செந்தூரனும், தபேலா எஸ்.விமல்சங்கரும் இணைந்து கொண்டனர்.
.
பாரதி உலகமகாகவி என்ற பொருளில் தமிழகத்தின் சொற்பொழிவாளரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமாகிய ரவி கல்யாணராமனால் சிறப்புரை ஆற்றப்பட்டது. தொடர்ந்து உடுவில் நாட்டிய கலாகேந்திரா நாட்டியப் பள்ளி மாணவர்களால் அதன் இயக்குநர் கலாநிதி கிருஷாந்தி ரவீந்திராவின் நெறியாள்கையில் பன்முகப்பாரதி என்ற பொருளில் நாட்டிய நாடகம் அளிக்கை செய்யப்பட்டது.
.
நிறைவு ஆடலை உரும்பிராய் கலைக்கோவில் மாணவியர் அதன் இயக்குநர் பத்மினி செல்வேந்திரகுமாரின் நெறியாள்கையில் மோகினி ஆட்டமாக வழங்கினர்.
.
தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினரும் யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளருமாகிய பா. பாலகணேசன் நன்றியுரை ஆற்றினார்.
.
விழாவிற்கு சுவிஸில் உள்ள யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மற்றும் யாழ். சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ், கிருபா லேணர்ஸ், சுசீலா நகைமாளிகை, திருநெல்வேலி சிவன் ஸ்ரோர்ஸ் ஆகியன அனுசரணை வழங்கியிருந்தன.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய பாரதிவிழா
Bookmark the permalink.