
இலக்கிய உலகு, கல்வி உலகு, நிர்வாக உலகு என இவரது ஆளுமை விரிவாக்கத்தை வகுத்து ஆராய முடியும். 50 நாவல்கள், 185 சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட பாடநூல்கள் எனப் படைத்த பெருமக்குரியவர். கடந்த 2016 சனவரி ; 25 ஆம் நாள் யாழ்ப்பாணம் பாரீர் என்ற பெயரில் விவரண நூல் ஒன்றைத் தனது 75 ஆவது பிறந்த நாள் நினைவாக வெளியிட்டிருந்தார்.
இலங்கைத் தமிழ் எழுத்துலகு பற்றி அறிய விரும்புகின்றவர்கள் செங்கை ஆழியானைத் தரிசித்த பின்பே ஏனையவர்களைத் தரிசிக்கும் ஒரு பொது ஒழுங்கினைக் கொண்டிருந்தனர். எழுத்தே வாழ்க்கை என வாழ்ந்த செங்கை ஆழியானின் பிரிவால் துயருறும் உள்ளங்களுக்கு எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.