யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு – தமிழாசிரியையின் பிரிவுக்காக அமைதிப் பிரார்த்தனையுடன் ஆரம்பம்

உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களின் நலன் கருதி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 20.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 3 மணி வரை நடைபெற்றது.   740 மாணவர்கள் பங்கேற்பதற்காக விண்ணப்பித்து அதில் 650 பேர் தேர்வுக்குத் தோற்றினர்.   தேர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அண்மையில் அகாலமரணமடைந்த தமிழாசிரியை கவிதா ஜெயசீலனின் ஆத்ம சாந்திக்காக அனைவரும் இரண்டு நிமிடங்கள் அமைதிப் பிராா்த்தனையில் ஈடுபட்டனர். … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கத்தின் திருக்குறள் போட்டி 20.05.2018 ஞாயிறு 

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் உயர்தரத்தில் தமிழ் கற்கும் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் திருக்குறள்  போட்டி எதிர்வரும் 20.05.2018  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 3 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. சுட்டெண் இல. தி 318 வரையுள்ளவர்களுக்கு இரசாயனவியல்துறை மண்டபத்திலும் தி.454 வரை முகாமைத்துவ பீட மண்டபத்திலும் தி 592 வரை வர்த்தகத்துறை (பல்கலைக்கழகப் பின்புறம்) மண்டபத்திலும் தி 740 வரை மருத்துவபீடப் பரீட்சை மண்டபத்திலும் போட்டி நடைபெறும் … மேலும் வாசிக்க

தமிழ்ச் சங்க உபதலைவர்கள் பல்கலைக்கழக பேரவைக்கு நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உப தலைவர்களான  கலாநிதி ஆறு திருமுருகன் மற்றும் அருட்பணி ஜெறோம் செல்வநாயகம் அடிகள் ஆகியோர் பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணி சிறக்க தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.  மேலும் வாசிக்க

உயர்தர மாணவர்களுக்காகத் தமிழ்ச்சங்கம் நடத்தும் திருக்குறள் போட்டி  

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், யாழ். சிவகணேசன் புடைவையகத்துடன் இணைந்து நடத்தும் திருக்குறள் வினாடிவினாப் போட்டியில் பங்கேற்க விரும்பும் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.    2018 ஆம் ஆண்டில் அல்லது 2019 ஆம் ஆண்டில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பாடசாலை ரீதியாகப் போட்டிக்கு விண்ணப்பிக்க முடியும். புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக உயர்தர தமிழ்ப் பாடவிதானத்திற்கு உட்பட்ட வகையில் போட்டி அமையும்.    போட்டியில் பங்கேற்பதற்கான … மேலும் வாசிக்க

மரபுக் கவிதைப் பயிலரங்கு ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் மரபுக் கவிதைப் பயிலரங்கு 14.04.2018 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நல்லை ஆதீனத்தில் ஆரம்பமாகியது. 
 
பயிலரங்க இணைப்பாளர் கவிஞர் கு.ரஜீபன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கவிஞர் சோ.பத்மநாதன், கவிஞர் த.ஜெயசீலன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர். 
 
நிகழ்வில் முப்பதிற்கும் மேற்பட்ட பயிலுநர்கள் கலந்து கொண்டனர். தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பலர் வருகை தந்து தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

தமிழ்ச்சங்கத்தின் கவிதைப் பயிலரங்கு சனி ஆரம்பமாகிறது

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும் மரபுக் கவிதைப் பயிலரங்கின் தொடக்க நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 14.04.2018 பிற்பகல் 4 மணிக்கு நல்லை ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது.    ஈழத்தின் மூத்த கவிஞர் சோ.பத்மநாதன், யாழ்.மாநகர ஆணையாளர் கவிஞர் த.ஜெயசீலன் ஆகியோரை வளவாளர்களாகக் கொண்டு இடம்பெறவுள்ள கவிதைப் பயிலரங்கு 12 வகுப்புக்கள் கொண்டதாக அமையவுள்ளது. வகுப்புக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3 மணி தொடக்கம் 5 மணி வரை இடம்பெறும். கற்கை நெறி இலவசம் … மேலும் வாசிக்க

விவாதச் சுற்றுப் போட்டி விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்ய..

தமிழ்ச் சங்கம் நடாத்தவுள்ள விவாதச் சுற்றுப்போட்டிக்கான விண்ணப்பங்களை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப முடிவுத் திகதி 30.04.2018 அனுப்ப வேண்டிய முகவரி தலைவர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இல 28 குமாரசாமி வீதி கந்தர்மடம் யாழ்ப்பாணம். திறந்தபிரிவு விண்ணப்பம் பாடசாலை பிரிவு விண்ணப்பம்   மேலும் வாசிக்க

தமிழ்ச் சங்கம் நடாத்தும் விவாதச் சுற்றுப்போட்டி -2018

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இளையவர்களின் விவாதத் திறனை வளர்க்கும் நோக்கில் விவாதச் சுற்றுப் போட்டியொன்றை நடாத்தவுள்ளது. போட்டி இரு பிரிவாக நடாத்தப்படும். 1. பாடசாலை மாணவர்களுக்கானது 2. திறந்த போட்டி – 35 வயதுக்குட்பட்டவர்களுக்கானது போட்டி தொடர்பான விதிமுறைகள் பாடசாலை மாணவர்களுக்கான போட்டி விதிமுறைகள் • ஒரு அணியில் ஐவர் இடம்பெற வேண்டும் • போட்டியில் மூவர் பங்குபற்றுவர். இருவர் காத்திருப்பு பட்டியலில் இருப்பர். • தெரிவுப் போட்டிகளுக்கான தலைப்புக்கள் … மேலும் வாசிக்க