தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவு அரங்கம் -2018

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவு அரங்கம் எதிர்வரும் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு யாழ். பிரதான வீதி (தண்ணீர் தாங்கி அருகில்) கலைத்தூது கலையகத்தில் நடைபெறவுள்ளது.  யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தனிநாயகம் அடிகள் நினைவுப் பேருரையை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் வ.மகேஸ்வரன் ‘தமிழ் அடையாள உருவாக்கம் – திருவள்ளுவரை முன்னிறுத்தி’ என்ற பொருளில் … மேலும் வாசிக்க

முகிலெனக்கு துகிலாகும் கவிதைநூல் வெளியீடு

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவிஞர் வடிவழகையனின் முகிலெனக்குத் துகிலாகும் கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த 14.07.2018 நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் தமிழ்ச்சங்கப் பொருளாளரும் யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஆசியுரைகளை தமிழ்ச்சங்க உபதலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், மூத்த கவிஞர் சோ.பத்மமநாதன் ஆகியோர் ஆற்றினர். வெளியீட்டுரையை வரணியூர் வே.சிவராசாவும் மதிப்பீட்டுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கம் நடத்திய திறந்த விவாதச் சுற்றுப்போட்டி-2018

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் விவாதச் சுற்றுப்போட்டியில் திறந்த பிரிவினருக்கான அரையிறுதிப் போட்டிகள் 15.06.2018 வெள்ளிக்கிழமை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றன.  பாடசாலை கல்வியை நிறைவு செய்த 35 வயதிற்கு உட்பட்ட ஈழத்து அறிஞர் ஒருவரின் பெயரைத் தாங்கிய ஆறு அணிகள் விவாதப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் களமிறங்கின.  புதுவை இரத்தினதுரையின் பெயரில் களமிறங்கிய யாழ். இளைஞர் அணியும் சுவாமி விபுலாநந்தரின் பெயரில் களமிறங்கிய கிழக்கு மாகாண இளைஞர் அணியும் … மேலும் வாசிக்க

நான்காவது தமிழ்ச் சங்கம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமே..

உலகில் நான்காவது தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணத்தில் 1900 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமே என தகை சார் பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ் உறுதிபடத் தெரிவிக்கின்றார். மதுரைத் தமிழ்ச் சங்கமே நான்காம் தமிழ்ச் சங்கம் என கூறிவரும் நிலையில் சான்றாதாரங்களின் படி யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமே முச்சங்கங்களுக்கு அடுத்த படியாக உருவாகியிருக்கின்ற தமிழ்ச் சங்கம் என யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் தெரிவித்துள்ள கருத்து உலகின் கவனத்தை ஈர்க்கும் கருத்தாக அமைகின்றது. … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கம் நடத்திய விவாதச் சுற்றுப்போட்டி

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் இளையோரின் விவாதத் திறனை மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுத்த பாடசாலை மாணவர்களுக்கான விவாதச் சுற்றுப்போட்டி 02.06.2018 சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சிறப்புற இடம்பெற்றது. தமிழ்ச்சங்கத்தி;ன் ஆட்சிக் குழு உறுப்பினர் சி.சிவஸ்கந்தசிறியை இணைப்பாளராகக் கொண்டு நடைபெற்ற இப்போட்டியில் பன்னிரண்டு பாடசாலைகள் பங்கேற்றன. போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க முதலாவது விவாதச் சுற்றுப்போட்டி வெற்றிக்கிண்ணத்திற்கு பாத்திரமாகியது. இரண்டாம் இடத்தை வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை பெற்றது. … மேலும் வாசிக்க

நன்றி வீரகேசரி…..

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்திய திருவள்ளுவர் விழா குறித்து வீரகேசரி வார இதழின் சங்கமம் பகுதியில் வெளியான குறிப்பு நன்றி வீரகேசரி  மேலும் வாசிக்க

சிறப்புற இடம்பெற்ற யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் வள்ளுவர் விழா 

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சிவகணேசன் புடைவையகமும் இணைந்து நடத்திய திருவள்ளுவர் விழா கடந்த 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர்  ச.லலீசன் தலைமையில்  நடைபெற்றது.  ஒருமுகப் பறை நடனத்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில்  தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசும் சிறப்புரையை வள்ளுவரின் முற்போக்குச் சிந்தனைகள் என்ற பொருளில் கொட்டகல ஆசிரிய கலாசாலை அதிபர் சந்திரலேகா கிங்ஸ்லியும் ஆற்றினர்.    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்பட்ட திருக்குறள்  தேர்வு முடிவுகள்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் கடந்த 20.05.2018 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட திருக்குறள் தேர்வின் முடிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இணைப்பில் அழுத்தி PDF file வடிவத்தில் பார்வையிட முடியும். 60 புள்ளிகளுக்கு மேற்பெற்ற அனைவருக்கும் பரிசில்கள் எதிர்வரும் 27.05.2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் வள்ளுவர் விழாவில் வழங்கப்படும்.  நாற்பது புள்ளிகளுக்கு மேற்பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் விரைவில்  சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கத்தின் திருக்குறள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அருணோதய மாணவன் முதலிடம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், பாடசாலைகளில் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடையே கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்திய திருக்குறள் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி முதலாம் இடத்தை அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவன் நி.சிவாஜனும் இரண்டாம் இடத்தை மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி ர.நிவேதாவும் மூன்றாம் இடத்தை மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி கோ.யனோவாவும் நான்காம் இடத்தை கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரி மாணவி யோ.நிவேதிதா மற்றும் மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் வள்ளுவர் விழா ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சிவகணேசன் புடைவையகமும் இணைந்து நடத்தும் திருவள்ளுவர் விழா எதிர்வரும் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்ச்சங்கத் தலைவர் விரிவுரையாளர் ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மலையகக் கிராமிய நடனம், திருக்குறளும் முகாமைத்துவமும் என்ற பொருளில் அமைந்த ஆய்வரங்கம், கொட்டகலை ஆசிரிய கலாசாலை ஆசிரியர்கள் வழங்கும் நாட்டிய நாடகம் என்பன இடம்பெறவுள்ளன.  நிகழ்வில் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் பேராசிரியர் மனோன்மணி … மேலும் வாசிக்க