யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் விழா-2019

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், யாழ்.சிவகணேசன் புடைவையகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கும் திருவள்ளுவர் விழா எதிர்வரும் 09.03.2019 சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.  சிறப்பு நிகழ்வாக பட்டிமண்டபம் இடம்பெறவுள்ளது. இதில் இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் (தமிழ்நாடு) நடுவராகக் கலந்து கொள்கிறார். யாழ். மற்றும் தமிழகப் பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். வடமாகாண ஆளுநர் முனைவர் சுரேன் இராகவன் முதன்மையுரை ஆற்றவுள்ளார். இவ்வாண்டும் திருவள்ளுவர் விழாவையொட்டி உயர்தரப் பள்ளி மாணவரிடையே திருக்குறள் தேர்வு நடைபெறவுள்ளது. … மேலும் வாசிக்க

சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் அவர்களின் மறைவு சைவத்தமிழ் உலகிற்குப் பேரிழப்பு – யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் அஞ்சலிச் செய்தி

ஈழத்துத் தமிழ் உலகில் ஆன்மீகச் சொற்பொழிவாளராகவும் கட்டுரையாளராகவும் திகழ்ந்து அரிய பல தொண்டுகளை ஆற்றிய சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் அவர்களின் மறைவு சைவத் தமிழ் உலகிற்குப் பேரிழப்பாகும் அமரரின் இழப்புக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் தன்  அஞ்சலிகளை பகிர்ந்து கொள்கின்றது.    “குப்பிளானில் பிறந்த சிவசுப்பிரமணியம் மகாலிங்கம் கணிதத்துறையில் பயிற்சி பெற்ற ஆசிரியராக மிளிர்ந்து சைவசமயத்தின் மீது கொண்ட பற்றினால் இந்து நாகரிகத்துறை ஆசிரியராகிப் பின்னர் அத்துறை சார்ந்த விரிவுரையாளராகவும் தன்னை … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் வடமாகாணக் கல்வித் திணைக்களமும் இணைந்து உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக முன்னெடுத்த கருத்தரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களமும் இணைந்து இந்த ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் புதிய பாடத்திட்டத்திற்கமைவாகத் தமிழ்ப்பாடத்திற்கான பரீட்சையை எதிர்கொள்ளும் வடபுல மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கை முன்னெடுத்திருந்தன.  கடந்த வாரம் (11.02.2019 – 15.02.2019) ஐந்து நாட்கள் வவுனியா, வரணி, யாழ்ப்பாணம், மருதனார்மடம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய இடங்களில் வடபுலத்தின் 12 கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்;கக்கூடிய வகையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஏறத்தாழ 2400 மாணவர்கள் இக்கருத்தரங்குகளில் … மேலும் வாசிக்க

கலாவிநோதன் சின்னமணி ஞாபகார்த்த வில்லுப்பாட்டுப் போட்டி

  கலாவிநோதன் க.கணபதிப்பிள்ளை (சின்னமணி) நினைவாக யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் வடக்கு மாகாணம் தழுவிய நிலையில் வில்லுப்பாட்டுப் போட்டிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.   இப்போட்டியில் தற்போது பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணியாகவோ அல்லது தாங்கள் அங்கத்துவம் பெறும் அறநெறிப்பாடசாலை அல்லது கலை அமைப்புக்கள் மன்றங்களின் ஊடாகவோ பங்கு பற்ற முடியும். . அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளுக்கு அமைவாகவே இப் போட்டிகள் … மேலும் வாசிக்க

திருக்குறள் வினாடி வினாப் போட்டி – 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் – சிவகணேசன் புடைவையகம் இணைந்து நடத்தும் வள்ளுவர் விழாவை முன்னிட்ட உயர்தர கலைப்பிரிவு மாணவர்களுக்கான திருக்குறள் வினாடி வினாப் போட்டி– 2019 (எழுத்துத் தேர்வு வகையானது) போட்டி விதி முறைகள் • இப் போட்டியில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்கள் பங்குபற்ற முடியும். (பாடசாலை ஊடான மீள் பரீட்சார்த்திகள் உட்பட) … மேலும் வாசிக்க

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து தமிழ்ச்சங்கம் தமிழியல் பணி

வடக்கின் தமிழ்ப்பாட மேம்பாட்டிற்கு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து யாழ். தமிழ்ச்சங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது. வடக்கு மாகாணத்தின் தமிழ்ப்பாட மேம்பாட்டிற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயன்தரக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுப்பதென வடமாகாணக் கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க முக்கியத்தர்களுக்கும் இடையில் (17.01.2019 புதன்) நடைபெற்ற கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளர் சி.சத்தியசீலன் தலைமையில் கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் நா.கந்ததாசன், மாகாணப் … மேலும் வாசிக்க