சிறப்புற நடைபெற்ற ஆய்வரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்.மறைமாவட்டமும் இணைந்து நடத்திய தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா ஆய்வரங்க நிகழ்வுகள் அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. நான்கு அமர்வுகளாக நடைபெற்ற இவ் ஆய்வரங்கில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு தமது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. சம்பிரதாயபூர்வமாக மேலும் வாசிக்க

தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாப் போட்டி பரிசளிப்பு பதிவுகள்

தமிழ்த்தூது தவத்திரு தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடபுல பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பேச்சு கவிதை கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் அண்மையில் நடைபெற்றது.யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியை செல்வி.வசந்தி அரசரட்ணம் தலமையில்நடைபெற்ற இந் நிகழ்வில் மாணவர்களுக்கு பதக்கங்களும் புத்தகப் பரிசுகளும் சான்றிதழ்களும் மேலும் வாசிக்க

செயலாளர் அறிக்கை-2012

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் செயலாளர் அறிக்கை – 2012 தொடக்கநாள் கூட்டம் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்கக் கூட்டம் நாவலர் கலாசார மண்டபத்தில் 10.06.2012 பிற்பகல் 4 மணிக்கு தகைசார் வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. முதலில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் திரு. ச. லலீசன் “நீராரும் கடலுடுத்த…” எனத் தொடங்கும் தமிழ்த் தெய்வ வணக்கப் பாடலை இசைத்தார். தொடர்ந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது. 1901 … மேலும் வாசிக்க

வள்ளுவர் விழா-2012

தமிழச் சங்கம் நடாத்திய வள்ளுவர் விழா 2012 யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர்.தி.வேல்நம்பி தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பட்டிமன்றம் ஆய்வரங்கம் என்பன சிறப்பு நிகழ்வுகளாக நடைபெற்றன. நிகழ்வின் பதிவுகளைப் புகைப்படத்தொகுப்புக்களாக காண தொடர்ந்து செல்லுங்கள் மேலும் வாசிக்க

யாழ்ப்பாணம் கண்ட மஹாகவி பாரதியின் திருநாள்..

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய பாரதி விழா 11.09.2012 நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் காலை மாலை அமர்வுகளாக சிறப்பாக இடம்பெற்றது. தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பெயரில் அமைந்த அரங்கத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன. காலை அமர்வுக்கு திருமறைக் கலாமன்ற நிறுவுநர் கலாநிதி வண. நீ.மரியசேவியர் அடிகள் தலைமை தாங்கினார். நாதஸ்வர இளவரசு பி.எஸ். பாலமுருகன் குழவினர் பாரதி பாடல்களை மங்கல இசையாக முழங்க நிகழ்வுகள் ஆரம்பமாயின. … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தொடக்க நிகழ்வு

யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் சிங்கைப் பரராசசேகரனும் சிங்கை செகராசசேகரனும் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சங்கம் நிறுவி தமிழை வளர்த்தும் தமிழ்க் கல்வியைப் பரப்பியும் வந்தனர். பின்னர் நூலங்களும் கல்விக்கூடங்களாகத் திகழ்ந்த கோவில்களும் போத்துக்கேயரால் அழிக்கப்பட்டன. இதனால் போத்துக்கேயர் காலத்தில் தமிழ்க் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்திருந்தது. பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் ஈழநாட்டில் தமிழ்க் கல்வி மிண்டும் வளர்ச்சியடையலாயிற்று.பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் உச்ச நிலையை அடைந்திருந்தது. தமிழ் … மேலும் வாசிக்க