கவிதைப் பட்டறை கவிதைப் போட்டி முடிவுகள்..

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் யாழ்.பல்கலைக்கழக தமிழ்த் துறையும் இணைந்து நடாத்திய கவிதைப் பட்டறையின் முடிவில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிரிவு கீழ்ப்பிரிவு முதலாம் இடம்  நேமிதா இரவீந்திரமூர்த்தி – தரம் 11 இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயம் இரண்டாம் இடம் பிரதாஐினி முத்தமிழ்ச்செல்வன் – தரம் 11 யாழ்.இந்து மகளிர் கல்லூரி மூன்றாம் இடம் பவதாரணி பிரதீபன் – தரம் 10 மகாஐனக் கல்லூரி பிரிவு மேற்பிரிவு … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கம் நடாத்தும் நாவலர் விழா

கரிகணண் நிறுவன ஆதரவில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் நாவலர் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14.12.2014) நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்ச் சங்கதலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் மங்கல விளக்கினை திரு.திருமதி.சி.ராஐ்குமார் தம்பதிகள் ஏற்றவுள்ளனர். தமிழ்த் தெய்வவணக்கத்தை திருமதி.ஹேமலதா கண்ணதாசனும் வரவேற்புரையை தமிழ்ச் சங்க பொருளாளர் திரு.ச.லலீசனும் நிகழ்த்தவுள்ளனர். நிகழ்வில் உரும்பராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.தி.செல்வமனோகரன் நாவலரின் பன்முக ஆளுமை எனும் தலைப்பில் … மேலும் வாசிக்க

சிறப்புற்ற கவிதைப் பட்டறை…

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கவிதைப் பட்டறை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய ‘தமிழ்க் கவிதை மரபும் மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் அமைந்த கவிதைப் பட்டறை 25.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தலைவரும் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பியின் தலைமையில் இடம்பெற்ற … மேலும் வாசிக்க

சிறப்புற்ற தமிழ்ச் சங்கத்தின் பாரதி விழா…

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த பாரதி விழாவும் இணையத்தளத் தொடக்க நிகழ்வும் (11.12.201) புதன்கிழமை பாரதி பிறந்த நாளன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி தலைமையில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் சிறப்புற இடம்பெற்றது. நிகழ்வின் அனுசரணையாளர்களான கிருபா லேணேர்ஸ் உரிமையாளர் அ.கிருபாகரன் தம்பதியரும் திருநெல்வேலி தேனு களஞ்சிய உரிமையாளர் தி.ஸ்ரீமோகனராஸ் தம்பதியரும் மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து சரவணை நாகேஸ்வரி … மேலும் வாசிக்க

திருக்குறளில் அறிவியல் கருத்துக்கள் – கருத்தரங்கு

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்ப்பாண முகாமையாளர் சம்மேளனமும் இணைந்து நடத்திய திருக்குறளில் அறிவியல் கருத்துக்கள் என்ற பொருளில் அமைந்த கருத்தரங்கு 14.05.2014 புதன்கிழமை நல்லூர் யூரோவில் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் டிஎப்சிசி வர்த்தக வங்கியின் யாழ் பிராந்திய முகாமையாளர் எஸ்.ரவீந்திரா வரவேற்புரையையும் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் வாழ்த்துரையையும் வழங்கினர். தொடர்ந்து முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசனின் நெறிப்படுத்தலில் … மேலும் வாசிக்க

வடபுலத்தில் தமிழ் வளர்க்கும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் தொடர்பில் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை….. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களுக்கு உரியது. முதற்சங்கம் தென்மதுரையிலும் இடைச்சங்கம் கபாடபுரத்திலும் கடைச்சங்கம் தற்போதைய மதுரையிலும் இருந்து தமிழ் வளர்த்ததாக வரலாற்றாசிரியர்கள் சுட்டுவர். பாண்டியரைத் தொடர்ந்து சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் முயற்சி யாழ்ப்பாணத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாண அரசர்கள் (ஆரியச் சக்கரவர்த்திகள்) எம்மண்ணை ஆண்ட காலத்தில் நல்லூரில் தமிழ்ச்சங்கம் ஒன்று இருந்ததாகக் கூறுவர். காப்பியம் புனையும் … மேலும் வாசிக்க

கவிதைப் பட்டறை

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறையும் இணைந்து நடாத்தும் கவிதைப்பட்டறை நிகழ்வு எதிர்வரும் 26.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது. துறைசார் வளவாளர்களால் வழங்கப்படவுள்ள இக் கவிதைப்பட்டறையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளோர் கலந்து கொள்ளலாம். அனுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் தயவுசெய்து கலந்துகொள்ள விரும்புவர்கள் தமது பெயர் மற்றும் மாணவராயின் பாடசாலை அல்லது வதிவிட முகவரியை 0778449739 என்ற தொலைபேசி … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பியின் வாழ்த்து…

இணையத்தால் எம் தமிழ் வளர்ப்போம் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் ஈழத்தமிழரின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் தமிழ் உணர்வும்,தமிழ்ப்பற்றும், தமிழறிவும் வளர்ந்திட வேண்டும் என்று உன்னதமான குறிக்கோளுடன் செயற்படுகிறது. தமிழ் மொழியின் தொன்மையையும் மேன்மையையும்,பண்பாட்டுச் செழுமையும் இளந்தலைமுறையினர் உயிர்ப்புடன் உணர்ந்து குதூகலிக்கவும் கொண்டாடவும் வழிசமைத்து வருகிறது.தமிழ்மொழியின் இயற்றமிழ்,இசைத்தமிழ், நாடகத்தமிழ் சார்ந்த  அறிவுசார் ஆற்றலை சமூக மட்டத்தில் வளர்ப்பது எமது தமிழ்ச்சங்கத்தின் இலக்காகும். தாய்மொழியாம் தமிழ்மொழி தமிழர் பண்பாடு என்ற இயங்கும் சக்கரத்தின் மையவிசையாகும். பண்பாட்டை … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்க உபதலைவர் பேராசிரியர். கி.விசாகரூபனின் வாழ்த்து..

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்துக்கு நீண்ட ஒரு வரலாறு உண்டு. 1900 களில் உருவாக்கப்பட்ட இச்சங்கம் சிலகாலம் உயிர்த்துடிப்புடன் இயங்கிப் பின்னர் செயலிழந்து போனது. சைவத்துக்கும் தமிழுக்கும் பேர் போன யாழ்ப்பாணத்தில் தமிழை வளர்த்திடத் தமிழ்ச் சங்கம் ஒன்று இல்லாத குறையைத் தமிழார்வலர்கள் பலரும் உணர்ந்து கொண்டதன் பயனாக 2011 இல் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் மீண்டும் உயிர்பெற்றெழுந்தது. தமிழ்மொழி தமிழர் பண்பாடு குறித்த நெயற்றிட்டங்களை முன்னெடுத்து அவற்றுக்கீடாகத் தமிழ்மொழியை அதன் பெருமையைää வளமையை … மேலும் வாசிக்க

தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பியின் அகத்தின் கண்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தோற்றம் மற்றும் செயற்பாடுகள் தேவைகள் என்பன குறித்து உலகத் தமிழர்களோடு காணொளி மூலம் இணைகின்றார் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி. அவரது கருத்துக்களைக் காணும் தாங்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுடனும் அதனை பரிமாறுங்கள். தங்களால் இயன்ற பங்களிப்பையும் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்காக்குங்கள். தங்கள் பங்களிப்பு தமிழ்ச் சங்கத்தின் வழி எங்கள் இனத்தை வாழ்விக்கும். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் தனது தமிழ் வளர்க்கும் பணியில் நீண்டு … மேலும் வாசிக்க