யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்குப் புதிய ஆட்சிக்குழு

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டம் கடந்த 11.03.2018 காலை 10 மணிக்கு நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாற்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சமுகமளித்திருந்தனர் இதன்போது புதிய ஆட்சிக்குழு அமைக்கப்பட்டு அது உடனடியாகவே பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டது. அதன் விபரம் வருமாறு  யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் (2018 – 2020 காலப்பகுதிக்குரிய நிர்வாகக் குழு) பெருந்தலைவர் : பேராசிரியர் அ. சண்முகதாஸ் (தகைசார் வாழ்நாள் பேராசிரியர், யாழ்.பல்கலைக்கழகம்) தலைவர் : திரு. ச.லலீசன் (பிரதி … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் செயற்பாட்டறிக்கை – (08.05.2016 – 28.02.2018 காலப்பகுதிக்குரியது)

பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் 08.05.2016 இல் யாழ். சைவபரிபாலன சபை மண்டபத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. இது 19.03.2016 இல் இடம்பெற்ற ஆட்சிக் குழுக் கூட்டப் பரிந்துரையின் பிரகாரம் அமைந்திருந்தது. இதன்படி பெருந்தலைவர் : பேராசிரியர் அ. சண்முகதாஸ் (தகைசார் வாழ்நாள் பேராசிரியர், யாழ்.பல்கலைக்கழகம்) தலைவர் : பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் (ஆய்வுப் பேராசிரியர், கக்சுயின் பல்கலைக்கழகம், யப்பான்) துணைத் … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும்  11.03.2018   ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் புதிய நிர்வாகத் தெரிவு, யாப்புச் சீர்திருத்த அறிக்கை முன்மொழிதல் முதலிய விடயங்கள் இடம்பெறவுள்ளன எனப் பொதுச் செயலாளர் ச.லலீசன் அறிவித்துள்ளார். மேலும் ஆயுள் அங்கத்தவர்களுக்கும் நடப்பு ஆண்டில் உறுப்புரிமைக்கு உரித்துடைய வருட அங்கத்தவர்களுக்குமான  கூட்ட அழைப்புக் கடிதம் அஞ்சலிடப்பட்டு விட்டதாகவும் … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர் அருட்பணி ஜெறோ அடிகளாருக்கு இனிய மணிவிழா வாழ்த்துக்கள் (25.01.2018)

புனித பத்திரிசியார் கல்லூரியின் புகழ் மிக்க அதிபராகப் பணியாற்றி 24.01.2017 புதன்கிழமை அகவை அறுபது எய்தி பணி நிறைவு கண்டுள்ள அதிபர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளாருக்கு எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அடிகளார் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர்களுள் ஒருவராகவும் விளங்குகின்றார். 25.01.1958 இல் கரம்பொனில் பிறந்த அவர் 25.01.2018 வியாழக்கிழமை அறுபதாவது பிறந்தநாளைக் காண்கிறார். 168 வருட பாரம்பரியம் கொண்ட புனித பத்திரிசியார் கல்லூரியின் 26 ஆவது அதிபராகக் … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய பாரதி நினைவரங்கம் – 2017

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதி நினைவரங்கம் கடந்த 30.12.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லை ஆதீன கலாமண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை வேல்.நந்தகுமாரும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசும் ஆற்றினர். தென்கிழ்க்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன் பாரதியும் இயற்கையும் என்ற பொருளில் உரையாற்றினார். தொடர்ந்து கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் பாரதி நினைவரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் பாரதி நினைவரங்கம்  எதிர்வரும் 30.12.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லை ஆதீன கலாமண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை வேல்.நந்தகுமாரும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசும் ஆற்றுவர். தென்கிழ்க்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன் பாரதியும் இயற்கையும் என்ற பொருளில் உரையாற்றுவார். தொடர்ந்து கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற … மேலும் வாசிக்க

தனித்தமிழ் ஆர்வலருக்கு இனிய வாழ்த்துக்கள்

முப்பத்து மூன்றாவது அரச கலாபூஷணம் விருது வழங்கும் விழாவில் இலக்கியத்துறைக்கான கலாபூஷணம் விருதைப் பெற்ற தனித்தமிழ் ஆர்வலா் , யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. நா.வை. குமரிவேந்தன் (மகேந்திரன்) அவர்களுக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் மகிழ்வடைகின்றது. நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது கிளிநொச்சியில் வெற்றி நகரில் (ஜெயந்தி நகர்) வசிக்கின்றாா். வருடந்தோறும் திருவள்ளுவர் நாள்காட்டியை வெளியிட்டு வருகின்றார். இதைவிட தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் நூல்களையும் … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம் நிகழ்வு 27.10.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.. . நிகழ்வில் வரவேற்புரையை தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் இரா.செல்வவடிவேலும் வாழ்த்துரையை நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் ஆற்றினர். . தமிழியல் வளர்ச்சியில் ஈழத்து அறிஞர்களின் வகிபாகம் என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இவ்வரங்கத்தில் சுவாமி … மேலும் வாசிக்க