செங்கை ஆழியானின் மறைவையொட்டி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு
சாகித்திய ரத்னா செங்கை ஆழியான், இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் ஓர் அத்தியாயமாகக் கொள்ளத்தக்கவர். யாழ். வண்ணார்பண்ணையில் உள்ள கலட்டியில் 1941 சனவரி 25இல் பிறந்தவர். தந்தை கந்தையா. வணிக முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர்;. தாய் அன்னம்மா. குடும்பத்தில் இவர் எட்டாவது பிள்ளை.. பாடசாலைக்கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் புவியியல் துறைசார்ந்த முதற்பட்டக் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். 1984 இல் முதுகலைமாணிப் பட்டத்தையும் 1991 இல் கலாநிதிப் பட்டத்தையும் … மேலும் வாசிக்க